முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வெளிநாடு பறக்கும் இந்தியன் 2 படக்குழு?

வெளிநாடு பறக்கும் இந்தியன் 2 படக்குழு?

கமல் ஹாசன் - ஷங்கர்

கமல் ஹாசன் - ஷங்கர்

ரயிலில் நடக்கும் ஒரு சண்டைக் காட்சி வெளிநாட்டு ஷெட்யூலின் போது படமாக்கப்படும் என்றும், இது கமல்ஹாசன் மற்றும் ஷங்கரின் உலகத்தரம் வாய்ந்த ஆக்ஷன் காட்சிகளாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியன் 2 படக்குழுவினர் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக தென்னாப்ரிக்கா செல்லவிருப்பதாகக் கூறப்படுகிறது.

கமல்ஹாசன் தற்போது ஷங்கரின் இயக்கத்தில் 'இந்தியன் 2' படப்பிடிப்பில் இருக்கிறார். இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து இணைந்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், கமல்ஹாசன் கல்பாக்கத்தில் உள்ள சத்ராஸ் டச்சு கோட்டையில் ஒரு வாரத்திற்கும் மேலாக 'இந்தியன் 2' படப்பிடிப்பில் கலந்துக் கொண்டார். அங்கு ஒரு பிரமாண்ட அதிரடி காட்சி படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

'இந்தியன் 2'-வின் கல்பாக்கம் ஷெட்யூல் இப்போது முடிவடைந்துவிட்டதாகவும், சிறிய இடைவெளிக்குப் பிறகு படக்குழுவினர் தென்னாப்பிரிக்காவுக்குச் செல்லவிருப்பதாகவும் கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்காவைத் தொடர்ந்து, 'இந்தியன் 2' அணி தாய்லாந்து செல்லவிருக்கிறது. மேலும் வெளிநாடுகளில் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. ரயிலில் நடக்கும் ஒரு சண்டைக் காட்சி வெளிநாட்டு ஷெட்யூலின் போது படமாக்கப்படும் என்றும், இது கமல்ஹாசன் மற்றும் ஷங்கரின் உலகத்தரம் வாய்ந்த ஆக்ஷன் காட்சிகளாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

'இந்தியன் 2' படத்தில் கமல்ஹாசனுடன், காஜல் அகர்வால், சித்தார்த், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு மே மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Kamal Haasan