முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Video: ''நெஞ்சைத் தொடும் கதை'' - சித்தார்த்தின் 'சித்தா' பட ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்..!

Video: ''நெஞ்சைத் தொடும் கதை'' - சித்தார்த்தின் 'சித்தா' பட ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்..!

சித்தார்த் - கமல்ஹாசன்

சித்தார்த் - கமல்ஹாசன்

சித்தார்த் நடித்திருக்கும் சித்தா திரைப்படம் நெஞ்சைத் தொடும் கதையாக இருக்கும் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். 

  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் சித்தார்த் தற்போது சித்தா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இந்தப் படத்தை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.யு. அருண்குமார் இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நடிகர் சித்தார்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் முதல் பார்வையை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிக்க | அப்போ மிஸ்ஸானது... இப்போ நடக்கப்போவுது... - தனுஷுடன் முதன்முறையாக இணையும் வடிவேலு..!

மேலும் இந்தப் படத்தை பற்றி கமல்ஹாசன் பேசுகையில், ''சித்தப்பா என்பதின் சுருக்கமே சித்தா. சினிமாவை நற்திசையை நோக்கி நகர்த்தும் பல கலைஞர்களில் முக்கியமான ஒருவர் தம்பி சித்தார்த். சித்தார்த்திற்கு பிறந்த நாள் வாழ்த்துகள். இந்த திரைப்படம் நிச்சயம் நெஞ்சை தொடும் வகையில் இருக்கும்.  படம் வெற்றி பெற வாழ்த்துகள்'' என கூறியுள்ளார்.

நடிகர் சித்தார்த் நடிப்பில் கடைசியாக தமிழில் கடந்த 2019 ஆண்டு அருவம் என்ற படம் வெளியாகியிருந்தது.  அதன் பிறகு 3 வருடங்களாக அவரது படங்கள் எதுவும் தமிழில் வெளியாகவில்லை. தெலுங்கில் கடந்த ஆண்டு மகா சமுத்திரம் என்ற படம் மட்டும் வெளியாகியிருந்தது. தற்போது சித்தார்த் நடிப்பில் டக்கர், இந்தியன் 2, சித்தா ஆகிய மூன்று திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Actor Siddharth, Kamal Haasan