முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ''நட்பில் துவங்கி உறவாகவே மாறிவிட்ட...'' - கிரேஸி மோகனின் மனைவியின் மறைவுக்கு கமல் இரங்கல்

''நட்பில் துவங்கி உறவாகவே மாறிவிட்ட...'' - கிரேஸி மோகனின் மனைவியின் மறைவுக்கு கமல் இரங்கல்

கிரேஸி மோகனுடன் கமல்ஹாசன்

கிரேஸி மோகனுடன் கமல்ஹாசன்

கிரேசி மோகனின் மனைவியின் மறைவுக்கு நடிகர் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

1990களுக்கு பிறகு கமல்ஹாசனிடமிருந்து வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ளும் படம் வந்தால், அடுத்ததாக ஒரு காமெடி படம் வரும்.  அப்படி அவரது காமெடி படங்களுக்கு பெரும்பாலும் கைகொடுத்தது கிரேஸி மோகனின் வசனங்கள்.

கிரேஸி மோகனின் திறமைகளை அறிந்து அவரை தனது படங்களில் பயன்படுத்த நினைத்திருக்கிறார் கமல். அப்போது சத்யா படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு அவரை வர சொல்லியிருக்கிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு சுடுகாடு ஒன்றில் நடந்து கொண்டிருந்திருக்கிறது.

இதுகுறித்து ஒரு பேட்டியில், ''தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்பார்கள். எங்கள் நட்பு சுடுகாட்டில் தான் துவங்கியது'' என கமலுடனான நட்பு குறித்து தனக்கே உரிய பாணியில் காமெடியாக பேசியிருப்பார் கிரேஸி மோகன்.

இதையும் படிக்க | பரபரப்பான இறுதிக்கட்டத்தை நோக்கி நகரும் ரஜினி சீரியல் அப்டேட்!

அபூர்வ சகோதரர்கள் துவங்கி மன்மதன் அன்பு வரை அவர்கள் கூட்டணி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. அது என்ன பூட்ட கேசு, ஒரு வேள, பூட்டுப் போட்ட சூட்கேஸாக இருக்குமோ?, முன்னாடி பின்னாடி... இப்படி அவரது வசனங்களை பேசிக் கொண்டே போகலாம். கிரேஸி மோகன் கடந்த 2019 ஆம் ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்தார்.

top videos

    இந்த நிலையில் கிரேஸி மோகனின் மனைவி நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். இதுகுறித்து ட்விட்டரில்பதிவிட்டுள்ள கமல், ''எனக்கு வாய்த்த இன்னொரு அண்ணியார் திருமதி. நளினி கிரேஸி மோகன் அவர்கள் இயற்கை எய்திவிட்டார். நட்பில் துவங்கி உறவாகவே மாறிவிட்ட அக்குடும்பத்தார் அனைவருடனும் துக்கம் பகிர்ந்து கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

    First published:

    Tags: Kamal Haasan