முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மாற்றுக் கருத்து இருந்தாலும்.... - பொன்னியின் செல்வன் 2 படம் குறித்து கமல் விமர்சனம்

மாற்றுக் கருத்து இருந்தாலும்.... - பொன்னியின் செல்வன் 2 படம் குறித்து கமல் விமர்சனம்

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2 படம் குறித்து கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 படம் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களுடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக திரிஷா, நந்தினியா ஐஸ்வர்யா ராய் என பொன்னியின் செல்வன் கதாப்பாத்திரங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன.

இதையும் படிக்க | இளையராஜாவின் அண்ணன் மகன் மரணம் - பிரபலங்கள் இரங்கல்

நான் ஒரு சினிமாவின் ரசிகன். அதுதான் எனது முதல் அடையாளம். சினிமா கலைஞன் என்பது என் இரண்டாவது அடையாளம். எனது முதல் விருப்பம், ஆசை எல்லாம் சினிமாவை பார்க்க வேண்டும். அது நல்ல சினிமாவாக இருக்க வேண்டும். அப்படி ஒரு சினிமாவாக அமைந்திருக்கிறது இந்த பொன்னியின் செல்வன். இதை ஒரு படமாக தான் நான் பார்க்கிறேன். மணிரத்னம் இதனை சிறப்பாக செய்திருக்கிறார்.

எல்லா படங்களுக்கும் மாற்றுக் கருத்துகள் இருக்கும். அது இந்தப் படத்தில் இருந்திருந்தாலும் கூட மக்கள் இதை பெரிதாக ஆதரிக்கிறார்கள் என்பதை செய்திகள் மூலம் அறிகிறேன். தமிழ் சினிமாவின் பெருமையும் தமிழரின் பெருமையையும் போற்றும் இத்தகைய படத்தை எடுப்பதற்கு தனி துணிச்சல் வேண்டும். அதனை எடுத்திருக்கும் முக்கியமான வீரன் மணிரத்னம். அவரை பாராட்ட வேண்டும். நல்லதொரு பொற்காலம் துவங்கியிருப்பதாகவே நான் நினைக்கிறேன். என்றார்.

top videos
    First published:

    Tags: Kamal Haasan, Mani ratnam, Ponniyin selvan