முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இந்தியன் 2வில் கமலுடன் மீண்டும் இணையும் 'விக்ரம்' பட நடிகர் - மீண்டும் நடக்குமா அந்த மேஜிக்?

இந்தியன் 2வில் கமலுடன் மீண்டும் இணையும் 'விக்ரம்' பட நடிகர் - மீண்டும் நடக்குமா அந்த மேஜிக்?

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

விக்ரம் படத்துக்கு பிறகு மீண்டும் இந்தியன் 2 படத்துக்காக கமல்ஹாசனுடன் பிரபல நடிகர் இணைந்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியன் 2, கேம் சேஞ்சர் என ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கிவருகிறார் இயக்குநர் ஷங்கர். சமீபத்தில் கேம் சேஞ்சர் படத்தின் ஒரு பாடல் படமாக்கப்பட்டது. இந்தப் பாடலுக்கு பிரபு தேவா நடனம் அமைத்திருந்தார். இந்தப் பாடலில் ராம் சரண் - கியாரா அத்வானி இருவரும் இணைந்து நடனமாடினர்.

இதனையடுத்து தற்போது இந்தியன் 2 படத்துக்காக இயக்குநர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் தைவான் சென்றுள்ளனர். அங்கே இந்தப் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுவருகின்றன. இந்த நிலையில் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் எடுத்துக்கொண்ட படத்தைப் பகிர்ந்திருக்கிறார். அவரது பதிவில், இந்தியன் 2 தைவான் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து இந்தப் படத்தில் நடிகர் காளிதாஸ் ஜெயராமும் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. முன்னதாக விக்ரம் படத்தில் கமலின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. விக்ரம் மேஜிக் இந்தியன் 2வில் நடக்குமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
 
View this post on Instagram

 

A post shared by Kalidas Jayaram (@kalidas_jayaram)top videos

    இந்தியன் 2 படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், மாரிமுத்து என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துவருகின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் செப்டம்பர் மாதம் நிறைவுபெறும் என ஷங்கர் ஒரு விழாவில் தெரிவித்திருந்தார். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

    First published:

    Tags: Anirudh, Kamal Haasan, Shankar