முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 25 ஆண்டுகளுக்கு பிறகு பாலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுக்கும் ஜோதிகா...!

25 ஆண்டுகளுக்கு பிறகு பாலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுக்கும் ஜோதிகா...!

ஜோதிகா

ஜோதிகா

பாலிவுட் படத்துக்காக 3வது முறையாக மாதவனும் ஜோதிகாவும் இணைந்து நடிக்கவுள்ளனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மாதவன் மற்றும் அஜய் தேவ்கன் இணைந்து நடிக்கும் படத்தில் ஜோதிகா இணைந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த நடிகை ஜோதிகா தற்போது தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடித்த 36 வயதினிலே, மகளிர் மட்டும் உள்ளிட்ட படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்றதந்தன.

ஜோதிகா நடிப்பில் கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு உடன்பிறப்பே என்ற படம் வெளியாகியிருந்தது. தற்போது மம்மூட்டியுடன் இணைந்து காதல் - தி கோர் படத்திலும்,  ஹிந்தியில் ஸ்ரீ என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன.

இதையும் படிக்க | விபத்தில் சிக்கிய ‘தி கேரளா ஸ்டோரி' நடிகை ஆதா ஷர்மா - இப்போது எப்படி இருக்கிறார்?

ஜோதிகா டோலி சஜா கே ரக்னா என்ற ஹிந்தி படத்தில் அறிமுகமானார். இந்தப் படம் காதலுக்கு மரியாதை ஹிந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீ படத்தில் மூலம் ஹிந்தியில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது ஹிந்தியில் உருவாகும் மற்றொரு புதிய திரைப்படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார். அந்த திரைப்படத்தில் மாதவன், அஜய் தேவ்கான் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விகாஸ் பால் என்பவர் அந்த படத்தை இயக்குகிறார்.

top videos

    ஏற்கனவே மாதவனும்,  ஜோதிகாவும் டும் டும் டும், பிரியமான தோழி ஆகிய படங்களில் நடித்துள்ள நிலையில் 3வது முறையாக இந்தப் படத்துக்காக இணையவுள்ளனர். இதில் நடிகை ஜோதிகாவுக்கு மிக முக்கியமான கதாபாத்திரம் என படக்குழுவினர் தெரிவித்திருக்கின்றனர். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. மும்பை, முசோரி, லண்டன் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளன.

    First published:

    Tags: Actor Madhavan, Actress Jyothika