முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தனுஷ் ஹாலிவுட்ல நடிக்கிறார்... அதுமாதிரிதான் இது... - மொழி சர்ச்சைக்கு பதிலளித்த ஜீவா

தனுஷ் ஹாலிவுட்ல நடிக்கிறார்... அதுமாதிரிதான் இது... - மொழி சர்ச்சைக்கு பதிலளித்த ஜீவா

தனுஷ் - ஜீவா

தனுஷ் - ஜீவா

மொழி சர்ச்சை குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு நடிகர் ஜீவா விளக்கமளித்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ் கலை டாட் காம் எனும் செயலி அறிமுக விழாவில் நடிகர் ஜீவா கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் பேசிய நடிகர் ஜீவா, கலைஞர்களுக்கு சாதி, மதம் இல்லை. ஜிப்ஸி படத்தின்போது இந்தியா முழுவதும் பயணிக்கக் கூடி வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் அனைத்து நாட்டுப்புறக் கலைஞர்களையும் சந்திக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகள் உள்ளன. ஆனால் கலைகளுக்கு மொழிகள் இல்லை என்று பேசினார்.

நான் டிஷ்யூம் படத்தில் ஒரு டயலாக் சொல்லி இருப்பேன். ‘நாங்கள் கைத்தட்டலுக்கு ஏங்குற ஜாதி’ என்ற மாதிரி ஒரு வசனம் வரும். இன்று இங்கு இருக்கிற கலைஞர்கள் மிக அற்புதமாக தங்கள் நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். அவர்களுக்கு பெரிய கரகோஷத்தை கொடுத்தாக வேண்டும். அவர்களது அடுத்தகட்ட வளர்ச்சி என்பது இன்றைக்கு சினிமா, யூடியூப், மேடை நிகழ்ச்சிகளிலும் வெளிநாட்டு நிகழ்ச்சிகள் போன்றவற்றிலும் கலந்துகொள்ள வேண்டும் என்று பேசினார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர், தமிழ் கலைகள் மட்டுமல்லாமல் இந்தியா முழுக்க கலைகளை இன்று இருக்கிற வைரல் உலகத்துக்கு எடுத்து சென்றால் அது அந்தந்த கலைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதிலிருந்து நிறைய பேருக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கும், நிகழ்ச்சிகள் கிடைக்கும். அம்பேத்கருடைய பிறந்த நாளின்போது பறையடித்தது மகிழ்ச்சியாக இருந்தது.

அப்போது குறுக்கிட்ட பத்திரிகையாளர், ''கலைக்கு மொழி இல்லைனு சொல்றீங்க. ஆனால் தமிழ் கலை டாட் காம் என்று பெயர் வைச்சிருக்கீங்க'' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு உடனடியாக பதிலளித்த ஜீவா, ''ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கும். கலைக்கு மொழிகள் இல்லை. தார தப்பட்டை காஷ்மீரில் இருக்காது. காலநிலைக்கு ஏற்றவாறு மாறுபடும். தனுஷ் ஹாலிவுட்ல நடிக்கிறார். அது மாதிரிதான் இதுவும். இதனை புரிந்துகொள்ளாமல் இருப்பதால் தான் நாம் வளராமல் இருக்கிறோம்'' என்றார்.

First published:

Tags: Actor Dhanush, Actor Jiiva