கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘பூலோகம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் என்.கல்யாண கிருஷ்ணன். அவர் மீண்டும் ஜெயம் ரவியுடன் கைகோத்திருக்கும் படம் ‘அகிலன்’. சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கும் இப்படத்தில் ப்ரியாபவானிசங்கர், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
“குற்றஉணர்ச்சி, நன்றி. விஸ்வாசம், ஒழுக்கம் இதெல்லாம் சமூகம் அடிமையாக்க உருவாக்கியிருக்கிறது”, “பங்குசந்தையில இருந்து சராசரி மனுசன் வாங்குற வெங்காயம் வரைக்கும் பொருளோட விலைய தீர்மானிக்கிறது சீ ட்ராஃபிக் தான்” போன்ற வசனங்கள் ட்ரெய்லரின் கவனம் ஈர்த்தன.
ஒரு ஹார்பர், அங்கு இருக்கும் கடத்தல் கும்பல், சோதனை அதிகாரிகளின் செயல்பாடுகள், அதில் இருக்கும் அரசியல் ஆகியவற்றை சுற்றியே திரைக்கதை எழுதப்பட்டுள்ளது.
ஹார்பரை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பரத்தாமனிடம் கடத்தல் உள்ளிட்ட குற்ற வேலைகளை நாயகன் அகிலன் செய்கிறான். ஒரு கட்டத்தில் அவனிடம் இருந்து வெளியேறி அதே ஹார்பரை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறான் அகிலன். எந்த விஷயம் வைரலாக வேண்டும், தனக்கு யார் எதிரியாக, துரோகியாக இருக்க வேண்டும் என்பதையும் அவனே முடிவு செய்கிறான். இதனால் இருவருக்கும் பகை உருவாகிறது, ஹார்பரில் சட்டவிரோத வேலைகள் அதிகரிக்கிறது. இதை கட்டுப்படுத்த முடியாமல் கோகுல் என்ற அதிகாரி திணறுகிறார். இதற்கு பின் நடக்கும் சம்பவங்களும் காரணங்களுமே அகிலன் திரைப்படம்.
‘பொன்னியின் செல்வன் பாகம் 1’ படத்தைத் தொடர்ந்து ஜெயம்ரவி நடிப்பில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் இந்தப் படம் வரும் 31-ம் தேதி ஜீ-5 தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Jayam Ravi