முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மீண்டும் கலக்க வருகிறது தனி ஒருவன் ஜோடி... ஜெயம் ரவி, நயன்தாராவின் இறைவன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மீண்டும் கலக்க வருகிறது தனி ஒருவன் ஜோடி... ஜெயம் ரவி, நயன்தாராவின் இறைவன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இறைவன்

இறைவன்

'வாமனன், 'என்னென்றும் புன்னகை', 'மனிதன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் படம் 'இறைவன்'.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் ஜெயம் ரவி மற்றும் நடிகை நயன்தாரா இணைந்து நடிக்கும் 'இறைவன்' படத்தின் வெளியீட்டு தேதி குறித்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அண்மையில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தில் அருண்மொழிவர்மனாக நடித்து கலக்கியிருந்தார் ஜெயம் ரவி. இவரின் கைவசம் ஏகப்பட்ட படங்கள் உள்ளன. தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஜெயம் ரவி.

'வாமனன், 'என்னென்றும் புன்னகை', 'மனிதன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் படம் 'இறைவன்'. நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

Also read... எனக்கு இந்த மாதிரி பையன தான் பிடிக்கும்... நடிகை அஞ்சலி ஓபன் டாக்!

'தனி ஒருவன்' படத்திற்கு பிறகு 8 ஆண்டுகள் கழித்து ஜெயம் ரவியும், நயன்தாராவும் மீண்டும் இந்தப் படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளனர். 'தனி ஒருவன்' படத்திற்கு பிறகு மீண்டும் இந்தக்கூட்டணி இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.




 




View this post on Instagram





 

A post shared by Jayam Ravi (@jayamravi_official)



தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தப்படம் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி ரிலீசாகவுள்ளதாக படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Jayam Ravi, Nayanthara