முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இயக்குநர் அட்லியோட மகனின் பெயர் என்ன தெரியுமா ? வைரலாகும் போட்டோ

இயக்குநர் அட்லியோட மகனின் பெயர் என்ன தெரியுமா ? வைரலாகும் போட்டோ

அட்லி - பிரியா

அட்லி - பிரியா

இயக்குநர் அட்லி - பிரியா தம்பதி முதன்முறையாக தனது மகனின் பெயரை அறிவித்துள்ளனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தமிழில் வசூல் ரீதியாக தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் அட்லி. இவர் தற்போது ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கியுள்ளார். ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படம் வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் அட்லி - பிரியா தம்பதிக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதையும் படிக்க |  இப்போதும் உடல் நடுங்குகிறது.... கார் விபத்தில் சிக்கிய பொன்னியின் செல்வன் பாடகி ரக்ஷிதா- அவங்களுக்கு என்ன ஆச்சு..

இந்த நிலையில் நடிகர் ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அட்லியுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து ரசிகர் ஒருவர் கேட்க, அதற்கு பதிலளித்த ஷாருக், ''அட்லி ரொம்ப ஸ்மார்ட். கடினமாக உழைக்கக் கூடியவர். அவருக்கு மீர் என்ற அழகான குழந்தை உள்ளது. மேலும் பிரியா எனக்கு நல்ல உணவளித்தார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

top videos

    இதனையடுத்து பிரியா அட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது குழந்தையுடன் இருக்கும் படத்தை பகிர்ந்து, ''ஆமாம் எங்களது குழந்தையின் பெயர் மீர்'' என்று முதன்முறையாக அறிவித்துள்ளார். இயக்குநர் அட்லியும் இதனைப் பகிர்ந்து அட்லி, ''குழந்தைக்கு உங்களது அன்பும் ஆசிர்வாதமும் தேவை'' என ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார்.

    First published:

    Tags: Atlee, Shah rukh khan