முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கார்த்தியின் ஜப்பான் பட ரிலீஸ் எப்போது? - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கார்த்தியின் ஜப்பான் பட ரிலீஸ் எப்போது? - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஜப்பான்

ஜப்பான்

ஜப்பான் திரைப்படத்தை முதலில் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கார்த்தி நடித்து வரும் ஜப்பான் திரைப்படத்தை தீபாவளிக் பண்டிகைக்கு வெளியிடப்படும் என படக் குழுவினர் அறிவித்திருக்கின்றனர்.

குக்கூ, ஜோக்கர் திரைப்படங்களை இயக்கிய ராஜூ முருகன் தற்போது கார்த்தி நடிப்பில் ஜப்பான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

உண்மை சம்பவத்தை எடுத்துக்கொண்டு புனைவு திரைக்கதை மூலமாக ஜப்பான் திரைப்படத்தை ராஜூ முருகன் எடுத்து வருகிறார். அதுவும் திருச்சியில் நடந்த ஒரு சம்பவத்தை கதையின் அடிநாதமாக்கி உள்ளார். இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜூன் மூன்றாம் தேதி தொடங்குகிறது. அந்த படப்பிடிப்பு 20 நாட்கள் நடைபெறும் என்றும், அத்துடன் படத்தின் படப்பிடிப்பு வேலைகளும் முடிவடையும் எனவும் பட குழு தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் கார்த்தியின்  ஜப்பான் திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என அறிவித்திருக்கின்றனர். கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அன்று சர்தார் திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியில் பெரும் வெற்றி அடைந்தது.

Also read... விஜய்யின் முதல் அரசியல் மாநாடு...? போஸ்டர் மூலம் கோரிக்கை வைத்த திருச்சி ரசிகர்கள்...!

இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கும் கார்த்தி நடிப்பில் புதிய திரைப்படம் வெளியாகிறது.  தீபாவளி பண்டிகைக்கு பெரும்பாலும் விஜய் அல்லது அஜித் படங்கள் வெளியாகி வந்தன ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கார்த்தி நடிக்கும் திரைப்படங்கள் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் திரைப்படத்தை முதலில் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டது. ஆனால் தற்போது தீபாவளி பண்டிகைக்கு வெளியிடுவதாக அறிவித்திருக்கின்றனர்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Actor Karthi