முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ''இளையராஜா முதிர்ச்சி இல்லாதவர்'' கடுமையாக விமர்சித்த ஜேம்ஸ் வசந்தன்

''இளையராஜா முதிர்ச்சி இல்லாதவர்'' கடுமையாக விமர்சித்த ஜேம்ஸ் வசந்தன்

இளையராஜா - ஜேம்ஸ் வசந்தன்

இளையராஜா - ஜேம்ஸ் வசந்தன்

சமீபத்திய நேர்க்காணலில் இளையராஜா குறித்து ஜேம்ஸ் வசந்தன் விஷயங்கள் சர்ச்சையைக் கிளப்பி வருகின்றன.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இளையராஜா முதிர்ச்சி இல்லாதவர் என ஜேம்ஸ் வசந்தன் தனது சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜேம்ஸ் வசந்தன். இதையடுத்து பல படங்களில் பணியாற்றினார். அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவதையும் வழக்கமாக வைத்திருக்கும் அவர், தனது சமீபத்திய நேர்க்காணலில் இளையராஜா குறித்து பேசிய விஷயங்கள் சர்ச்சையைக் கிளப்பி வருகின்றன.

"இளையராஜா மாதிரி மட்டமான மனிதரை பார்க்கவே முடியாது. அவர் ஒரு பெரிய இசையமைப்பாளர், ஞானின்னு பட்டம் எல்லாம் கொடுத்திருக்காங்க, அதுக்கெல்லாம் அவர் முழு தகுதியானவர். அவர் இசையை நான் விமர்சிக்கவில்லை, அப்படி செய்தால் என் குருவை நான் விமர்சிப்பதாக இருக்கும், காரணம் கற்றுக்கொண்டதே அவரிடம் தான். அவருடைய சில இசைக்கோர்வைகள் எனக்குப் பிடிக்காமல் போகலாம், ஏனென்றால் கிரியேட்டிவிட்டி மாறுபடும். அவர் ஒரு ஞானி என்பதற்காக எல்லாமே பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இளையராஜாவின் பாடல்களைப் பற்றி பெருமையாக மணிக்கணக்கில் பேசுவேன்.

ஆனால் ஒரு மனிதனா அவர் ரொம்ப மட்டமானவர். கொஞ்சம் கூட முதிர்ச்சியில்லாதவர். அவர் ஒரு சாதாரண மனிதன் என்றால் இவ்வளவு விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை. கடந்த 25 வருடமா சினிமா துறையில் பலர் அவரை சாமின்னு தான் கூப்பிடுறாங்க. அவருக்கு சாமியார்ன்னு பேர் இருக்கு. ரஜினி சார் எல்லாம் அவரை சாமி சாமின்னு தான் கூப்பிடுவாரு. அந்தளவுக்கு ஆன்மிக விஷயங்களை பேசுவார். ஆன்மிகத்துக்குள்ள போக போக முதிர்ச்சியும், பெருந்தன்மையும், சகிப்புத்தன்மையும், ஏற்றுக் கொள்ளுதலும், புரிந்துக் கொள்ளுதலும் வந்தாதானே அது ஆன்மிகம்.

இவர் ஆன்மிகத்துக்குள்ள போறேன்னு சொல்லிட்டு, வெளியில ரொம்ப அசிங்கமா பேச ஆரம்பிச்சாரு. உதாரணத்துக்கு, சில மாதங்கள் முன்பு கூகுள் சார்பா ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். அங்க இசை சம்பந்தமா கேட்ட கேள்விக்கு எல்லாம், முட்டாள் தனமா கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாம, ”இயேசு கிறிஸ்து பிறந்தாரு, வாழ்ந்தாரு, உயிர் துறந்தார்ன்னு சொல்றாங்க, எனக்கெல்லாம் அது தெரில, ரமண மகரிஷி ஒருத்தர் தான் செத்து உயிர்தெழுந்தவர்ன்னு” சொல்றாரு.

ஆன்மிக நம்பிக்கை உள்ளவர்கள், கோடிக்கணக்கான மக்கள் இயேசு கிறிஸ்துவை நம்புகிறார்கள், அத்தனை பேர் மனதையும் காயப்படுத்த கூடாது என நினைப்பார்கள். ரமண மகரிஷி உயிர்த்தெழுந்ததே பொய் என அவரின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படமாக எடுத்த இயக்குநர் கூறுகிறார். வலிப்பு வந்து ஐந்தாறு மணி நேரம் அவர் கிடந்திருக்கிறார், இறக்கவில்லை. அதை அவர் செத்து உயிர்த்தெழுந்ததாக திரித்து விட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால் இளையராஜா இதைப்பற்றி எதுவும் கூறாமல், மற்றவர்களின் நம்பிக்கையை காயப்படுத்தும் விதமாக நடந்துக் கொண்டார்.

ஆன்மிகத்துக்குள்ள போனவருக்கு இந்த புரிதல் எதுவுமே இல்லையென்றால் அவர் ஏமாற்றுக்காரர் தானே?” என அந்த நேர்க்காணலில் பேசியுள்ளார் ஜேம்ஸ் வசந்தன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Ilayaraja