முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அவதார் ரசிகர்களே ரெடியா? ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. இதோ விவரம்!

அவதார் ரசிகர்களே ரெடியா? ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. இதோ விவரம்!

அவதார்

அவதார்

Avatar OTT Release: அவதார் தி வே ஆஃப் வாட்டர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் அவதார்: தி வே ஆஃப் வாட்டர் என்ற பெயரில் 3டி தொழில்நுட்பத்துடன் கடந்தாண்டு டிசம்பரில் வெளியானது. உலக அளவில் சுமார் 160 மொழிகளில் வெளியான இந்தப் படம் இதுவரை ரூ. 18,000 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக அளவில் கடந்த ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படங்களில் முதலிடத்தை அவதார் 2 பிடித்திருக்கிறது. மேலும் இதுவரை அதிகம் வசூலித்த படங்களில் 3வது இடத்தை அவதார் திரைப்படம் பிடித்திருக்கிறது. இருப்பினும் முதல் பாகத்தின் வசூலை இந்தப் படத்தால் எட்ட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | 3 நாட்கள் இருள்.. திடீரென வெடித்த வெடிபொருள் - பிரபல நடிகை பகிர்ந்த அதிர்ச்சி சம்பவம்

top videos

    இந்தப் படம் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் என்ற பிரிவில் ஆஸ்கர் விருது வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஜூன் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தப் படம் குழந்தைகளுக்கு செம ட்ரீட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    First published:

    Tags: Avatar