மலையாள திரையுலகில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்துவருபவர் விநாயகன். கடந்த 1995 ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான மாந்திரீகம் படத்தின் முலம் நடிகராக அறிமுகமான விநாயகன் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்துவருகிறார். மலையாளம் தவிர தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் விநாயகன் நடித்துள்ளார்.
விஷாலின் திமிரு படத்தில் மாற்றுத் திறனாளி வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான விநாயகன், தனுஷின் மரியான் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார்.
சமீபத்தில் விநாயகன் தனது ட்விட்டர் பக்கத்தில் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக அறிவித்து அதிர்ச்சியளித்திருக்கிறார். கடந்த ஆண்டு மாடல் ஒருவர் விநாயகன் மீது MeToo புகார் அளித்திருந்தார்.இதனால் அவருக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்திருக்கின்றனர்.
மீடூ சர்ச்சை குறித்து விளக்கமளித்த விநாயகன், 10 பெண்களுடன் நெருக்கமாக பழகியதாகவும் அவர்கள் சம்மதத்துடன் தான் உறவு கொண்டதாகவும் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதுதான் அவரது விவாகரத்துக்கு மூலக் காரணம் என்று கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Me too Movement