முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 4 நாயகிகள்.. வித்தியாசமான கதை.. ஒரே படத்தில் புகழின் உச்சிக்குச் சென்ற பி.யூ.சின்னப்பா!

4 நாயகிகள்.. வித்தியாசமான கதை.. ஒரே படத்தில் புகழின் உச்சிக்குச் சென்ற பி.யூ.சின்னப்பா!

ஜகதலப்ரதாபன்

ஜகதலப்ரதாபன்

உதயகிரி அரசனும், அரசியும் ஒருநாள் நிலா வெளிச்சத்தில் ஓய்வாக அமர்ந்திருக்கையில் தங்களின் மகன்களிடம், அவர்களுக்கு இன்பத்தைத் தரக்கூடியது எது என்று கேட்க, வேட்டையாடுவதும், பகைவர்களை வென்று, அவர்களை சிறைபிடித்து வருவதும் என மூத்த இரு மகன்களும் கூற, இளையவன் ப்ரதாபன், நான்கு உலகத்தைச் சேர்ந்த இந்திரகுமாரி, நாககுமாரி, வர்ணகுமாரி அக்னிகுமாரி ஆகியோருடன் மகிழ்ந்திருப்பதே இன்பம் தரக்கூடியது என்கிறான்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

பெண்கள் விஷயத்தில் காதல் மன்னனாக இருப்பவர்களை ஜகதலப்ரதாபன் என்று அழைப்பதை கேட்டிருப்போம். ப்ரதாபன் என்பவனின் ஜகதல வித்தைகளால் உருவானது இந்தப் பெயர். இதை வைத்தே ஒரு திரைப்படம் 1944 இல் வெளிவந்தது.

கே.எஸ்.நாராயண ஐயங்கார், எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு இருவரும் இணைந்து பக்ஷிராஜா ஸ்டுடியோஸ் சார்பில் முக்கியமான திரைப்படங்களை தயாரித்தனர். 1941 இல் இவர்கள் தயாரித்த ஆரியமாலா திரைப்படம் பி.யூ.சின்னப்பாவை முன்னணி நாயகனாக நிலைநிறுத்தியது. அதன்பின் 1943 இல் தியாகராஜ பாகவதரை வைத்து தயாரித்த சிவகவி திரைப்படமும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த வெற்றிகளைத் தொடர்ந்து 1944 இல் பி.யூ.சின்னப்பாவை வைத்து ஜகதலப்ரதாபன் படத்தை எடுத்தனர். ஸ்ரீராமுலு நாயுடு படத்தை இயக்கினார்.

மார்பகங்கள் பெரிதாக இல்லனு கமெண்ட்.. - வேதனையாக பேசிய நடிகை ராதிகா ஆப்தே!

உதயகிரி அரசனும், அரசியும் ஒருநாள் நிலா வெளிச்சத்தில் ஓய்வாக அமர்ந்திருக்கையில் தங்களின் மகன்களிடம், அவர்களுக்கு இன்பத்தைத் தரக்கூடியது எது என்று கேட்க, வேட்டையாடுவதும், பகைவர்களை வென்று, அவர்களை சிறைபிடித்து வருவதும் என மூத்த இரு மகன்களும் கூற, இளையவன் ப்ரதாபன், நான்கு உலகத்தைச் சேர்ந்த இந்திரகுமாரி, நாககுமாரி, வர்ணகுமாரி அக்னிகுமாரி ஆகியோருடன் மகிழ்ந்திருப்பதே இன்பம் தரக்கூடியது என்கிறான். தந்தையின் முன்பே இப்படியொரு தகாத விஷயத்தை கூறுகிறானே என்று கோபமாகும் மன்னன், சொன்னது தவறு என்று மன்னிப்புக்கேள், இல்லை, மகன் என்றும் பார்க்காமல் சிரச்சேதம் செய்துவிடுவேன் என்று கூறி சென்றுவிடுகிறார்.

மகன் மன்னிப்புக் கேட்கப் போவதில்லை, கணவன் சிரச்சேதம் செய்யாமல் விடப்போவதில்லை என்பதை உணர்ந்த மகாராணி, மகனை நாட்டைவிட்டு போகும்படி கூற, ப்ரதாபனும் நாட்டைவிட்டு வெளியேறி, விசித்திரன் என்பவனின் நட்பை பெறுகிறான். அவர்கள் இருவருக்கும் ஒளவை வடிவில் இருக்கும் காளி அடைக்கலம் தருகிறாள். அவளது ஆடு, மாடுகளை மேய்க்கும் பொறுப்பை ப்ரதாபன், விசித்திரன் இருவரும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

ஒருநாள் இந்திரகுமாரி உள்பட நான்கு தேவகன்னிகைகள் குளிப்பதை ப்ரதாபன் பார்க்கிறான். காமம் ஏறி இந்திரகுமாரியின் சேலையை எடுத்துக் கொண்டு அவன் ஓட, பின்னாலேயே வரும் இந்திரகுமாரி அவனை சிலையாக்கிவிடுகிறாள். விஷயம் அறிந்த ஒளவை, அவனை மீண்டும் மனிதனாக்குவதுடன், மறுநாள் இந்திரகுமாரிகுளிக்கையில் அவளது சேலையை எடுத்துக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் வரும்படி கூறுகிறாள். ப்ரதாபனும் அப்படியே செய்கிறான். சேலையில்லாமல் இந்திரலோகம் செல்ல முடியாத இந்திரகுமாரி ப்ரதாபனை தொடர்ந்து வருகிறாள். ஒளவை ப்ரதாபனை குழந்தையாக மாற்றிவிட, இந்திரகுமாரி அந்த குழந்தையை ஆசையுடன் கொஞ்ச, அது ப்ரதாபன் என தெரிய வருகிறது. இருவரும் திருமணம் முடித்து, அங்கிருந்து விடைபெறுகிறார்கள்.

'23 படம் சென்சார் கொடுக்கல.. மம்முட்டி தடை செய்தார்' - குற்றச்சாட்டுகளை அடுக்கிய ஷகிலா!

காட்டில் வேட்டைக்கு வரும் விச்வரஞ்சிதபுரத்து அரசன், ப்ரதாபனை தனது சேவகனாக்கிக் கொள்கிறான். ப்ரதாபனின் மனைவி இந்திரகுமாரியின் அழகு அவனது கண்ணியத்தை மறைக்கிறது. அவளை எப்படியும் அடைவது என மந்திரியின் துணையுடன் ஆலோசனை செய்கிறான். ப்ரதாபனை தேவையில்லாத வேலைகள் கூறி பல உலகங்களுக்கும் அனுப்பி வைக்கிறான். அப்படி செல்லும் ப்ரதாபன் வர்ணகுமாரி, நாககுமாரி, அக்னிகுமாரி ஆகியோரை திருமணம் செய்து வெற்றியோடு திரும்புகிறான். இந்த நான்கு தேவகன்னிகைகளும் சேர்ந்து மனோரஞ்சிதம் என்ற அழகிய நகரை நிர்மாணிக்கிறார்கள். வறிய நிலையில் இருக்கும் ப்ரதாபனின் தாய், தந்தை மற்றும் சகோதரர்கள் அவனுடன் வந்து இணைந்து கொள்கிறார்கள். ப்ரதாபன் இந்திரகுமாரியிடமிருந்து திருடிய சேலையை தனது தாயிடம் கொடுப்பதை அவனது மனைவிகள் பார்க்கிறார்கள். தங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் ப்ரதாபன் இவ்விதம் செய்வதாகக் கருதி, அந்த சேலையின் உதவியாய் நால்வரும் தேவலோகம் செல்கின்றனர். ப்ரதாபனும் அவனது குடும்பமும் மறுபடி வறுமைக்குத் திரும்புகிறார்கள். ப்ரதாபன் இந்திலோகம் சென்று, பல சோதனைகளில் வெற்றியடைந்து, மீண்டும் தனது நான்கு மனைவிகளுடன் பூமிக்குத் திரும்பி அவர்களுடன் சந்தோஷமாக வாழ்வை கழிப்பது கதை.

இதில் ப்ரதாபனாக பி.யூ.சின்னப்பாவும், விசித்திரனாக என்.எஸ்.கிருஷ்ணனும் நடித்தனர். இந்திரகுமாரி, நாககுமாரி, வர்ணகுமாரி, அக்னிகுமாரி அகிய வேடங்களில் முறையே சரோஜினி, ஜீவரத்தினம், ஜெயலட்சுமி, வரலட்சுமி ஆகியோர் நடித்தனர். பேபி கமலாவின் நடனம் படத்தின் பேசப்பட்ட விஷயங்களில் ஒன்று. இந்தப் படத்தின் வெற்றி பி.யூ.சின்னப்பாவை புகழின் உச்சியில் கொண்டு சேர்த்தது.

1944 ஏப்ரல் 13 இதே நாளில் வெளியான ஜகதலப்ரதாபன் இன்று 79 வது வருடத்தை நிறைவு செய்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Classic Tamil Cinema