முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சந்திரமுகி 2 படத்தில் வடிவேலு மற்றும் பி.வாசு இடையே மோதலா?

சந்திரமுகி 2 படத்தில் வடிவேலு மற்றும் பி.வாசு இடையே மோதலா?

பி.வாசு மற்றும் வடிவேலு

பி.வாசு மற்றும் வடிவேலு

சந்திரமுகி 2 படத்தில் வடிவேலு மற்றும் இயக்குநர் பி.வாசு இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் படமான சந்திரமுகி வெளியாகி கிட்டத்தட்ட 18 வருடங்களாகிறது. சிவாஜி புரொடக்சன்ஸ் சார்பாக பிரபு தயாரித்த இந்தப் படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதற்கு முந்தைய படமான பாபா படம் தோல்வியடைந்த நிலையில் சந்திரமுகி இசை வெளியீட்டு விழாவில் நான் யானை இல்லை குதிரை, யானை விழுந்தால் எழுந்திருக்க தாமதாமகும் குதிரை சட்டென எழுந்துவிடும் என்று பேசியிருப்பார். அதற்கேற்ப சந்திரமுகி மூலம் சொல்லி அடித்தார் ரஜினிகாந்த்.

ஜோதிகாவுக்கு முக்கிய கதாப்பாத்திரம் உள்ள இந்தப் படத்தில் ரஜினிகாந்த் எப்படி நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார் என பலருக்கும் ஆச்சரியமாக இருந்திருக்கும். அதற்கேற்ப படம் முழுக்க ஜோதிகா ஸ்கோர் செய்ய, கிளைமேக்ஸில் தனது லகலகலக என்ற ஒற்றை வார்த்தையின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ரஜினிகாந்த் தன் பக்கம் திருப்பினார்.

வடிவேலுவின் காமெடியாக இருக்கட்டும், வித்யாசாகரின் பாடல்களாக இருக்கட்டும் இன்றளவும் ரசிகர்களால் மறக்க முடியாததாக இருந்துவருகிறது. இதனையடுத்து சந்திரமுகி 2 ஆம் பாகம் அறிவிக்கப்பட்டபோது ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியது. அதற்கேற்ப ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு, இசை - கீரவாணி என அறிவிப்புகள் வெளியானது.

இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது வடிவேலுக்கும், பி.வாசுவுக்கும் கருத்துவேறுபாட்டால் மோதல் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பில் வடிவேலுவை வாசு கடுமையான வார்த்தைகளில் திட்டினார் என செய்திகள் இணையதளங்களில் பரவின. இந்நிலையில் இதுபற்றி இப்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இருவருக்கும் எந்த மோதலும் ஏற்படவில்லை. மைசூர், ஐதராபாத், மும்பை உட்பட பல இடங்களில் நடந்த படப்பிடிப்பில் வடிவேலு கலந்து கொண்டு முடித்துக் கொடுத்துவிட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

top videos
    First published:

    Tags: Actor Vadivelu