தமிழ் திரையுலகில் அதிக வெள்ளிவிழா படங்கள் கொடுத்த நடிகர் யார் என்ற கேள்விக்கு பலரும் பலவித பதில்கள் கூறி வருகின்றனர். சிவாஜி, எம்ஜிஆர், கமல், ரஜினி ஆகியோரின் ரசிகர்கள் தங்களது தலைவரின் படங்கள்தான் அதிக வெள்ளி விழா கண்டது என அடம்பிடிக்கின்றனர். ஆனால், இவர்களில் யாராவது ஒருவர்தான் வெற்றியாளராக இருக்க முடியும்.
எந்த பாரபட்சமும் இன்றி யார் அதிக வெள்ளிவிழா படங்கள் கொடுத்தது என்று ஆராய்ந்தால் சிவாஜி கணேசனே முதலிடத்தில் வருகிறார். அவருக்கு அடுத்து ரஜினி, கமல் இருக்கிறார்கள். இவர்களுக்குப் பிறகுதான் எம்ஜிஆரின் படங்கள் வருகின்றன.
சிவாஜி நடிப்பில் வெள்ளி விழா கண்ட படங்களும் அவை ஓடிய தினங்களும் பார்ப்போம்.
1. பராசக்தி - 17-10-1952 - 296 நாள்கள்
2. ஸ்கூல் மாஸ்டர் (கன்னடம்) - 31-01-1958 - 175 + நாள்கள்
3. வீரபாண்டிய கட்டபொம்மன் - 16-05-1959 - 181 நாள்கள்
4. பாகப்பிரிவினை - 31-10-1959 - 216 நாள்கள்
5. இரும்புத்திரை - 14-01-1960 - 181 நாள்கள்
6. குறவஞ்சி - 04-03-1960 - 175 + நாள்கள்
7. பாவ மன்னிப்பு - 16-03-1961 - 177 நாள்கள்
8. பாசமலர் - 27-05-1961 - 176 நாள்கள்
9. ஸ்கூல் மாஸ்டர் (மலையாளம்) - 03-03-1964 - 175 நாள்கள்
10. திருவிளையாடல் - 31-07-1965 - 179 நாள்கள்
11. தர்த்தி (இந்தி) - 06-02-1970 - 266 நாள்கள்
13. பட்டிக்காடா பட்டணமா - 06-05-1972 - 182 நாள்கள்
14. வசந்த மாளிகை - 29-09-1972 - 287 நாள்கள்
15. தங்கப்பதக்கம் - 01-06-1974 - 181 நாள்கள்
16. உத்தமன் - 25-06-1976 - 203 நாள்கள்
17. தியாகம் - 04-03-1978 - 175 நாள்கள்
18. பைலட் பிரேம்நாத் 30-10-1978 22 நாள்கள்
19. திரிசூலம் - 27-01-1979 - 200 நாள்கள்
20. தீர்ப்பு - 21-05-1982 - 177 நாள்கள்
21. நீதிபதி - 16-06-1983 - 177 நாள்கள்
22. சந்திப்பு - 16-06-1983 - 175 நாள்கள்
23. முதல் மரியாதை - 15-08-1985 - 177 நாள்கள்
24. படிக்காதவன் - 11-11-1985 175 நாள்கள்
25. தேவர் மகன் - 25-10-1992 - 180 நாள்கள்
26. படையப்பா - 10-04-1999 - 212 நாள்கள்
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை சிவாஜி அளவுக்கு 26 வெள்ளி விழா படங்கள் கொடுத்த நடிகர் யாருமில்லை. இந்தியாவிலேயே இவ்வளவு அதிக வெள்ளிவிழா படங்கள் தந்த நடிகர் அவரைத் தவிர வேறு யாரும் இருக்கிறார்களா என்பதும் தெரியவில்லை.
சிவாஜி நடித்த பல படங்கள் 100 நாள்கள், 175 நாள்கள் என்ற பென்ச் மார்க்கை நூலிழையில் தவறவிட்டவை. உதாரணமாக 1973 மார்ச் 31 இதே நாளில் வெளியான திரைப்படம் ராஜராஜசோழன். சிவாஜியின் பாரத விலாஸ் வெளியான ஏழே நாளில் ராஜராஜசோழன் வெளியானது. பாரத விலாஸ் 84 நாள்களையும், ராஜராஜசோழன் 77 நாள்களையும் நிறைவு செய்தபோது சிவாஜியின் பொன்னூஞ்சல் திரைப்படம் வெளியானது. ஒரே நேரத்தில் மூன்று படங்கள் திரையரங்கில் ஓடின. இதில் பாரத விலாஸ் 100 நாள்களை நிறைவு செய்ய, ராஜராஜ சோழன் 98 நாள்கள் ஓடி, 100 நாள் என்ற எல்லையை தவறவிட்டது.
இப்படி 100 நாள், 175 நாள் சாதனையை தவறவிட்ட சிவாஜி படங்கள் குறித்தும் ஒரு பட்டியல் தயாரிக்கலாம். இதுபோன்ற சாதனை உலகத்தில் வேறு எந்த நடிகருக்கும் இருக்க வாய்ப்பில்லை. சிவாஜிக்கு அடுத்த இடத்தில் அதிக வெள்ளிவிழா படங்களுடன் ரஜினியும், அவரைவிட ஒன்றிரண்டு படங்கள் குறைவாக கமலும் இருக்கிறார். இவர்களின் சாதனையை புதிய தலைமுறை நடிகர்கள் கற்பனையிலும் எட்ட முடியாது என்பது நிதர்சனம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.