முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இளையராஜாவின் அண்ணன் மகன் மரணம் - பிரபலங்கள் இரங்கல்

இளையராஜாவின் அண்ணன் மகன் மரணம் - பிரபலங்கள் இரங்கல்

பாவலர் சிவன்

பாவலர் சிவன்

இளையராஜாவின் அண்ணன் மகன் பாவலர் சிவன் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இசையமைப்பாளர் இளையராஜாவின் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜன். இவர் நாடக எழுத்தாளர், இசையமைப்பாளர் என பணியாற்றிவந்திருக்கிறார். இளையராஜாவின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு பங்காற்றியவர். இவர் கடந்த 1973 ஆம் ஆண்டே மரணமடைந்தார்.

பாவலர் வரதராஜனின் மகன் பாவலர் சிவன் கிதார் இசைக்கலைஞர். இளையராஜாவின் குழுவில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். சில படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். புதுச்சேரியில் வசித்துவந்த இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்திருக்கிறார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

இதையும் படிக்க | மணிரத்னம் - கமல்ஹாசன் இணையும் படம்.. ஹீரோயின் இவரா? சூடுபிடிக்கும் பேச்சுவார்த்தை

அவரது மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் இசையமைப்பாளர் தினா, தெரிவித்துள்ள இரங்கல் பதிவில், இசைஞானியின் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜனின் மகன் கிதார் இசைக் கலைஞர் சிவராமன் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

top videos
    First published:

    Tags: Ilaiyaraja