முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ‘பாலய்யா கண்ணடித்தால் ஜீப் பறக்கும்… நான் செய்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள்’ – வைரலாகும் ரஜினியின் பேச்சு

‘பாலய்யா கண்ணடித்தால் ஜீப் பறக்கும்… நான் செய்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள்’ – வைரலாகும் ரஜினியின் பேச்சு

ரஜினிகாந்த் – பாலய்யா

ரஜினிகாந்த் – பாலய்யா

சினிமாவிலும், அரசியலிலும் பாலய்யா இன்னும் நிறைய சேவை செய்ய வேண்டும். – ரஜினிகாந்த்

  • Last Updated :
  • Tamil Nadu, India

பாலய்யா கண்ணடித்தால் ஜீப் பறக்கும். இதை நான், அமிதாப் பச்சன், ஷாரூக்கான் சல்மான் கான் என யார் செய்தாலும் மக்கள் ஏற்க மாட்டார்கள். பாலய்யாசெய்தால் மட்டுமே ஏற்பார்கள் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தெலுங்கு மொழியில் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. தெலுங்கு சூப்பர் ஸ்டார் என்.டி.ஆரின் நூற்றாண்டு விழா ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது-

என்னுடைய நண்பர் பாலய்யாவால் பார்வையாலேயே ஒருவரை கொல்ல முடியும். ஒரு முறை அவர் கண்ணடித்தால் ஜீப் பற்றி எரிந்து 30 அடிக்கு மேலே பறக்கும். இதனை ரஜினிகாந்த், அமிதாப் பச்சம், ஷாரூக் கான், சல்மான் கான் என யாராலும் செய்ய முடியாது. இதுபோன்ற காட்சிகளை படத்தில் வைத்தால் மக்கள் எங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் பாலய்யாவை ரசிகர்கள் ஏற்பார்கள். தெலுங்கு ரசிகர்கர்கள் பாலய்யாவை வெறும் நடிகராக மட்டும் பார்க்கவில்லை. மறைந்த என்.டி.ஆரைப் போன்று பார்க்கிறார்கள். அவர் நல்ல மனம் கொண்டவர். சினிமாவிலும், அரசியலிலும் பாலய்யா இன்னும் நிறைய சேவை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த், சந்திரபாபு நாயுடு ஒரு தீர்க்கதரிசி, தொலைநோக்கு பார்வை கொண்ட அரசியல் தலைவர்.  அவருடைய தொலைநோக்கு பார்வையின் காரணமாகவே ஹைதராபாத் இப்போது ஹைடெக் சிட்டியாக உருவெடுத்துள்ளது.  சந்திரபாபு நாயுடுவின் தொலைநோக்கு பார்வை காரணமாக ஹைதராபாத் நகரம் நியூயார்க் நகரம் போல் சிறப்பு அடைந்துள்ளது என்று கூறினார்.

First published:

Tags: Rajinikanth, Tollywood