பொன்னியின் செல்வன் படத்தின் ஆந்தம் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகைகள் திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோருக்கு தமிழ் பாடல்களை பாடி நடிகர் கார்த்தி சமர்ப்பித்தார். அதற்கு அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் மிகுந்த கரகோஷத்துடன் ஆதரவு அளித்தனர்.
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வரும் 28ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அந்த திரைப்படத்தில் இடம்பெறும் ஆந்தம் பாடலை படக்குழுவினர் இன்று வெளியிட்டனர். சுமார் 2000-க்கும் அதிகமான மாணவர்கள் முன்னணியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயராம், நடிகைகள் திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டனர்.
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் ஜெயராமின் பேச்சு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. அதேபோல இந்த முறையும் படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரசிய கதையை கூறினார். குறிப்பாக பிரபுவின் காட்சி குறித்து நகைச்சுவையாக பேசினார்.
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பேசுகையில், ஒரு நடிகையாக இந்த திரைப்படத்தில் அலை கடல் பாடல் தனக்கு கிடைத்தது மிகப் பெருமை. அந்தப் பாடலை கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி என்றார்.
இதையும் படிக்க | இவ்ளோ ஒல்லியா இருக்காரே! இவர் நிஜமாவே ரோபோ ஷங்கரா ? வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ
இவர்களைத் தொடர்ந்து பேசிய நடிகர் கார்த்தி, தனக்கே உரிய ஸ்டைலில் சில விஷயங்களை பகிர்ந்தார். மாணவர்கள் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்து, அதன்பின் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த தனக்கு, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோருடன் ரொமான்ஸ் செய்யும் வந்தியத் தேவன் கதாபாத்திரம் கிடைத்தது மிக மகிழ்ச்சி என கூறினார். அதற்கு மாணவர்கள் மிகுந்த கரகோஷத்தை எழுப்பினர்.
கார்த்தி பேசுகையில் தொகுப்பாளர் இங்கு இருப்பவர்களுக்கு தமிழ் பாடல்களை சமர்ப்பித்தால் எந்த பாடல்களை சமர்ப்பிப்பீர்கள் என்று கேட்டார். அப்போது திரிஷாவிற்கு காதலே காதலே பாடலையும், ஐஸ்வர்யா ராய்க்கு உலக அழகியே பாடலையும் பாடி அசத்தினார். அதை மைதானத்தில் இருந்த கேட்ட மாணவர்கள், கார்த்திக்கு ஆதரவை தெரிவித்தனர்.
இவரைத் தொடர்ந்து பேசிய நடிகை திரிஷா, பொன்னியின் செல்வன் வெற்றியடையும் என தெரியும். ஆனால் குந்தவை கதாபாத்திரம் இந்த அளவுக்கு வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கவில்லை என மகிழ்ச்சி தெரிவித்தார்.
ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள விக்ரமிடம் மூன்று பாடல்களைப் பாடச் சொல்லி தொகுப்பாளர் கோரிக்கை வைத்தார். அப்போது 'பாட்டு பாடவா பார்த்து பேசவா', என்னவளே என்னவளே பாடல்களுடன் பொன்னியின் செல்வன் படத்தின் பாடலையும் நடிகர் விக்ரம் மேடையில் பாடினார்.
இந்த நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய ஏ.ஆர். ரஹ்மான் பொன்னியின் செல்வன் படத்தின் பின்னணி இசைக்காக பாலி, சென்னை, மும்பை, லண்டன் ஆகிய இடங்களில் பணியாற்றியதாக தெரிவித்தார். மேலும் தான் பாடி நடித்துள்ள ஆன்தம் பாடலையும் அவர் வெளியிட்டார்.
பொன்னியின் செல்வன் ஆந்தம் பாடல் வெளியீட்டு விழாவின் இறுதியில் படக்குழுவினர் மாணவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அப்போது அண்ணா பல்கலை மாணவர்கள் தங்களுடைய மொபைல் Flash-ஐ ஆன் செய்து படக்குழுவினருடன் கொண்டாடினர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ponniyin selvan