முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நகைச்சுவையின் ’ஆல் இன் ஆல் அழகு ராஜா’ கவுண்டமணிக்கு ஹேப்பி பர்த்டே!

நகைச்சுவையின் ’ஆல் இன் ஆல் அழகு ராஜா’ கவுண்டமணிக்கு ஹேப்பி பர்த்டே!

நடிகர் கவுண்டமணி

நடிகர் கவுண்டமணி

HBDGoundamani : 1970-களில் பல்வேறு திரைப்படங்களில் தலை காட்டியிருந்தாலும் ரஜினிக்கு அடையாளம் தந்த 16 வயதினிலே திரைப்படம்தான் கவுண்டமணியை வெகுஜனத்திற்கு அடையாளம் காட்டியது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ் சினிமா நகைச்சுவையின் ’ஆல் இன் ஆல் அழகு ராஜா’ கவுண்டமணியின் பிறந்த நாளான இன்று அவரின் ‘அட்றா சக்கை’ காமெடி குறித்த ஒரு தொகுப்பை தற்போது காணலாம்.

1970-களில் பல்வேறு திரைப்படங்களில் தலை காட்டியிருந்தாலும் ரஜினிக்கு அடையாளம் தந்த 16 வயதினிலே திரைப்படம்தான் கவுண்டமணியை வெகுஜனத்திற்கு அடையாளம் காட்டியது. தொடர்ந்து ’வைதேகி காத்திருந்தாள்’ திரைப்படத்தில் ஆரம்பித்த கவுண்டமணியின் காமடி மராத்தானில் ’சின்ன வாத்தியார்’ திரைப்படம் கவுண்டமணியை காமெடியில் பெரிய வாத்தியார் என நிரூபித்தது.. காது கேட்கும் திறன் குறைந்த கோவை சரளா இடிச்சபுளி செல்வராஜ் இருவரிடமும் மாட்டிக்கொண்டு அல்லாடும் காட்சிகளில் காமெடி கலாட்டா செய்திருப்பார் கவுண்டமணி.

கவுண்டமணியின் கவுண்டர் ஸ்பெசல் நிறைந்த திரைப்படமாக அமைந்தது ’நாட்டாமை’ இத்திரைப்படத்தில் கவுண்டமணிக்கு தகப்பனாக வரும் செந்திலின் காதல் லீலைகளால் கவுண்டமணி படும் பாட்டை ஒரு பாட்டாகவே படிக்கலாம். இத்திரைப்படத்தின் மூலம் ’டே தகப்பா’ என்பதை தமிழ் கூறும் நல்லுலகுக்கு அறிமுகப்படுத்தினார் கவுண்டமணி.

Also read... அஜித்துக்கு டப்பிங் பேசிய விக்ரம்... எந்த படத்திற்கு தெரியுமா?

ஒரு முரட்டு காளையாக கவுண்டமணி நகைச்சுவையால் கலக்கிய திரைப்படம் ‘ஜல்லிகட்டுகாளை. செந்திலின் தகிடுதத்தத்தால் ’ஜம்பலக்கா பம்பா’ குடும்பத்தில் பெண் பார்க்கும் படலத்தின் காட்சிகளும் “மின்னல் போன்ற கண்கள்…மிட்டாய் போன்ற மூக்கு..தொட்டால் சிவக்கும் வாய்” என சொல்லும் கவுண்டமணியின் கவிதையும் காமெடி சவுக்காய் ஜல்லிக்கட்டுகாளையை ஓட வைத்தது.

சூரியன் திரைப்படத்தில் பன்னி குட்டி ராமசாமி, , உத்தமராசாவில் ஒண்டி புலி, ஜெய்ஹிந்தில் போலீஸ் கோட்டை சாமி,, வியட்னாம் காலனியில் ஜோசப், கர்ணாவில் கல்னாயக், மேட்டுகுடியில் காளிங்கராயன், காதலர் தினத்தில் ஜாக் என ரசிகர்களின் மனதில் கவுண்டமணி பதியம் போட்ட கதாபாத்திரங்கள் நகைச்சுவை ரசிகர்களின் மனதில் என்றும் தங்கிடும் காமெடி கல்வெட்டுகளே.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Actor Goundamani, Tamil