முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தோனி தயாரிக்கும் படம் - வெளியானது ஹரிஷ் கல்யாணின் 'எல்ஜிஎம்' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

தோனி தயாரிக்கும் படம் - வெளியானது ஹரிஷ் கல்யாணின் 'எல்ஜிஎம்' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

நதியா - ஹரிஷ் கல்யாண் - இவானா

நதியா - ஹரிஷ் கல்யாண் - இவானா

தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்துள்ள எல்ஜிஎம் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான மகேந்திர சிங் தோனி,  தன்னுடைய மனைவியுடன் இணைந்து தோனி எண்டர்டெயின்மெண்ட்  என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.  அதில் உருவாகும் முதல் திரைப்படத்தை தமிழில் தயாரிக்கிறார்.

ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்கும் இந்த திரைப்படத்திற்கு Let's Get Matried என தலைப்பு வைத்திருக்கின்றனர்.  சுருக்கமாக LGM என அழைக்கப்படும் இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாண் நாயகனாகவும்,  இவானா நாயகியாகவும் நடித்துவருகின்றனர். அதேபோல் நடிகை நதியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் படத்தின் முதல் பார்வை போஸ்டரை தோனி நிறுவனம் வெளியிட்டுள்ளது.  அதில் ஹரிஷ் கல்யாண், இவானா நதியா ஆகியோர் இடம்பெறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.  கிரிக்கெட் வீரர் தோனி முதன் முறையாக தயாரிக்கும் இந்த தமிழ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அதுவும் இளமை தழும்பும் கதைக்களம் என கூறப்படுகிறது.  இந்தப் படம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் Lets Get Married திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

top videos
    First published:

    Tags: Actor Harish kalyan, MS Dhoni