சிவகார்த்திகேயன் போன்று கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலையுலக வாழ்க்கையைத் தொடங்கியவர் மணிகண்டன். யூடிபர், மிமிக்ரி கலைஞர், வசனகர்த்தா, இயக்குநர், நடிகர் என தான் எடுத்த அனைத்து அவதாரங்களிலும் வெற்றிக்கொடி நாட்டியுள்ளார்.
8 தோட்டாக்கள், காதலும் கடந்து போகும், காலா, விக்ரம் வேதா, உள்ளிட்ட படங்களில் நடித்தாலும் ஹலிதா ஷமீமின் சில்லுக்கருப்பட்டி படம் தான் திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து சில நேரங்களில் சில மனிதர்கள், ஜெய் பீம் ஒரு நடிகராக சிறப்பான பங்களிப்பை வழங்கிவருகிறார்.
இதையும் படிக்க | ரஜினி, கமல் படங்களின் நடிகைக்கு எய்ட்ஸ்.. வாட்டிய வறுமை.. மனதை உருக்கும் கடைசி காலம்!
View this post on Instagram
சமீபத்தில் வெளியான குட் நைட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுக்களை குவித்துவருகிறது. குட் நைட் பட புரமோஷன்களில் அஜித், ரகுவரன், ஆடுகளம் கிஷோர் ஆகியோர் குரல்களில் தத்ரூபமாக பேசியிருந்தார். குறிப்பாக பல்வேறு காலகட்டங்களில் அஜித், ரகுவரன் ஆகியோரின் குரல்கள் எவ்வாறு மாறியது என பேசிக் காட்டி ரசிகர்களை மிரள வைத்தார்.
இந்த நிலையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் மணிகண்டன் பேசிய வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்துவருகின்றனர். இந்த வீடியோவில் எம்ஜிஆர், எஸ்.ஜே.சூர்யா போல மிமிக்ரி செய்து அசத்துகிறார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Vijay tv