முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இதுதான் நடந்தது.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் குறித்து விளக்கம் அளித்த நடிகர்!

இதுதான் நடந்தது.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் குறித்து விளக்கம் அளித்த நடிகர்!

ஜி.எம்.குமார் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

ஜி.எம்.குமார் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

ஜி.எம்.குமார் இறந்துவிட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்று அச்சிடப்பட்டு, அந்த போஸ்டர் முன்பு அவர் நிற்கும் புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் ஜி.எம்.குமார் தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன்பு எடுத்துக் கொண்ட படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

காதல் வைரஸ், வெயில், குருவி, அவன் இவன், கர்ணன் உட்பட பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் ஜி.எம்.குமார். அதோடு அறுவடை நாள், பிக் பாக்கெட், இரும்பு பூக்கள், உருவம் ஆகியப் படங்களையும் இயக்கியுள்ளார். கன்னிராசி, காக்கி சட்டை, மை டியர் மார்த்தாண்டன் ஆகியப் படங்களின் எழுத்தாளரும் இவர் தான்.

இதுமட்டுமில்லாமல், சின்னத்திரை தொடர்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார். இதற்கிடையே ஜி.எம்.குமார் இறந்துவிட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்று அச்சிடப்பட்டு, அந்த போஸ்டர் முன்பு அவர் நிற்கும் புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதில், ‘ஆயிரக்கணக்கான நகைச்சுவை வெளிப்பாடுகள் தான் வாழ்க்கை’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதனைகண்ட ரசிகர்கள் பலரும் நீங்கள் இறந்துவிட்டதாக யார் போஸ்டர் அடித்தார்கள்? என கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஜி.எம்.குமார், படப்பிடிப்பில் நான் இறந்ததாக எடுக்கப்பட்ட காட்சி தான் இது, யாரும் பதற்றமடைய வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Tamil Cinema