முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வாலி அஜித் முதல் விஜய் சேதுபதி வரை.. அச்சு அசலாக குரல் மாற்றி பேசிய ஜெய்பீம் பட நடிகர்!

வாலி அஜித் முதல் விஜய் சேதுபதி வரை.. அச்சு அசலாக குரல் மாற்றி பேசிய ஜெய்பீம் பட நடிகர்!

மணிகண்டன்

மணிகண்டன்

வாலி அஜித் முதல் விஜய் சேதுபதி வரை, அச்சு அசலாக குரல் மாற்றி பேசிய ஜெய்பீம் பட நடிகர் மணிகண்டனின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நாயகனாக திகழ்பவர் மணிகண்டன். ரேடியோ ஜாக்கியாக மீடியாவுக்குள் நுழைந்தார். பின் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் ரியாலிட்டி ஷோவில் தனியார் கலைஞனாக தன் வாழ்க்கையைத் தொடங்கியவர் மணிகண்டன்.

அதனை தொடர்ந்து காலா, ஜெய்பீம் படங்களின் மூலம் தனக்கென தனி முத்திரை பதித்தவர் நடிகர் மணிகண்டன். இவர் தற்போது நடித்துள்ள படம் குட் நைட். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கியுள்ளார்.

ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தில், மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக், பக்ஸ், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற 12-ஆம் தேதி வெளியாகியிருக்கிறது. குறட்டை’யால் ஒரு மனிதன் சந்திக்கும் பிரச்சினைகளை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம் வருகின்ற 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் படத்தின் புரோமோஷன் பணிகளில் தீவிரம் காட்டும் படக்குழு சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் - 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

அப்போது அவர் தன்னிடம் இருக்கும் ஒரு திறமையை வெளிப்படுத்தியதை பார்த்த பலரும் இப்போது வாயடைத்து போய் இருக்கின்றனர். அந்த அளவுக்கு அவர் அஜித், விஜய் சேதுபதி, ரகுவரன் போன்ற நடிகர்கள் போல் மிமிக்ரி செய்து மேடையையே கலகலக்க வைத்து விட்டார்

முதலில் அவர் அஜித்தின் முந்தைய படங்களில் அவரது குரல் எப்படி இருக்கும் தற்போது எப்படி இருக்கும் என்று பேசி இருக்கிறார். அதிலும் வாலி படத்தில் அஜித் எப்படி பேசினாரோ அதேபோல் பேசி அந்த நிகழ்ச்சியில் இருந்தவர்களை அசத்தியுள்ளார்.

Also read... நடிகை அனிகா சுரேந்திரன் போட்டோவுடன் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் - ஷாக்கில் உறைந்த ரசிகர்கள்.. நடந்தது என்ன?

அதனை தொடர்ந்து நடிகர் கிஷோர் போல் பேசி இருக்கிறார். அதன் பின் தமிழ் சினிமாவின் ஆன்டனியா இருக்கும் ரகுவரன் போல் பேசி இருக்கிறார். யாரடி நீ மோகினி படத்தில் ரகுவரன் எப்படி பேசி இருப்பாரோ அதேபோல் மணிகண்டன் பேசிய மணிகண்டன் அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இறுதியாக விஜய் சேதுபதி படத்தில் பேசுவதை விட அவர் நேரில் தங்களுடன் பேசும் உரையாடலை பேசிய போது அந்த நிகழ்ச்சியில் இருந்த அனைவரும் கைதட்டி தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Entertainment