முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அஜித்துடன் ஒரு மணி நேரம் சந்திப்பு.. நடந்தது என்ன? முன்னாள் அமைச்சர் பகிர்ந்த தகவல்!

அஜித்துடன் ஒரு மணி நேரம் சந்திப்பு.. நடந்தது என்ன? முன்னாள் அமைச்சர் பகிர்ந்த தகவல்!

அஜித்குமார்

அஜித்குமார்

அஜித்தை சந்தித்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாக முன்னாள் அமைச்சர் விஜய்பாஸ்கர் ட்வீட் செய்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் அஜித் குமாரின் அப்பா பி.சுப்பிரமணியம் கடந்த மாதம் 24 ஆம் தேதி அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் அஜித்தை சந்தித்து இரங்கல் தெரிவித்தனர்.

அதன் ஒரு பகுதியாக ஈ.சி.ஆர் சாலையில் உள்ள நடிகர் அஜித்தின் இல்லத்திற்கு நடிகர் விஜய் நேரில் சென்று அஜித் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இதன் ஒரு பகுதியாக நடிகர் அஜித்தை சந்தித்து ஆறுதல் கூறியதாக முன்னாள் அமைச்சர் விஜய் பாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், தமிழ்த்திரையுலகின் மிக முக்கியமான முன்னணி நடிகர் அஜித்குமாரின் அன்புத் தந்தை மறைவையொட்டி மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவுடன் அவரது இல்லம் சென்று ஆறுதல் தெரிவித்தோம்.

கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நீடித்த அச்சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசுகிற வாய்ப்பு அமைந்தது. அனுபவமும், மனப்பக்குவமும் நிறைந்த அவருடைய பேச்சில் எதார்த்தமும் உண்மையும் பிறர்க்கு உதவ வேண்டுமென்கிற தூய மனமும் வெளிப்பட்டது மிகுந்த பாராட்டுக்குரியது. 'எண்ணம்போல் வாழ்க்கை, எண்ணம்போல் தான் வாழ்க்கை' அன்புத் தந்தையின் ஆசியோடு தொடர்க! வெல்க! என்று குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Actor Ajith