முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சந்திரமுகி 2 படத்தின் சூப்பர் அப்டேட்.. வெளியான புதுத்தகவல்!

சந்திரமுகி 2 படத்தின் சூப்பர் அப்டேட்.. வெளியான புதுத்தகவல்!

சந்திரமுகி 2

சந்திரமுகி 2

சந்திரமுகி 2 திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மைசூரில் தொடங்கியது. அதற்குப் பிறகு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் உருவாகும் சந்திரமுகி 2 திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கிய சந்திரமுகி திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது. அந்த திரைப்படம் சென்னையில் 800 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

இந்த நிலையில் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை பி.வாசு தற்போது இயக்கி வருகிறார். அதில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். அதேபோல் முதல் பாகத்தில் நடித்த நடிகர் வடிவேலு சந்திரமுகி 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மைசூரில் தொடங்கியது. அதற்குப் பிறகு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் சில மாதங்களாக அந்த படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது.

Also read... உடல் வளர்ச்சிக்கு ஹார்மோன் ஊசி போட்டேனா? - உண்மையை உடைத்த நடிகை ஹன்சிகா!

இந்த நிலையில் நாளை முதல் சந்திரமுகி 2 திரைப்படத்திற்கான இறுதி கட்டப்பட படிப்பை தொடங்குகின்றனர். அதில் ராகவா லாரன்ஸ், வடிவேலு உள்ளிட்டவர்கள் பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்படுகின்றன.

இதில் இவர்களை தவிர லட்சுமிமேனன் கங்கனா ரனவத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட தயாரிப்பு நிறுவனமான லைக்கா திட்டமிட்டு இருக்கிறது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Actor Raghava lawrence, Actor Vadivelu