முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சைபர் க்ரைம் ஆபத்து... குடும்ப கட்டுப்பாடு... ஃபர்ஹானா திரை விமர்சனம்!

சைபர் க்ரைம் ஆபத்து... குடும்ப கட்டுப்பாடு... ஃபர்ஹானா திரை விமர்சனம்!

ஃபர்ஹானா படம்

ஃபர்ஹானா படம்

Farhana movie review : ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் க்ரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் ஃபர்ஹானா திரைப்படம் ஐஸ்வர்யா ராஜேஷூக்கு மற்றொரு முக்கியமான படமாக அமையும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ஃபர்ஹானா திரைப்படம் வெளியாகியுள்ளது. இஸ்லாமிய பெண்ணின் வாழ்கை பின்புலத்தில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ஃபர்ஹானா. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், அனுமோல், ஐஸ்வர்யா தத்தா, ஜித்தன் ரமேஷ், செல்வராகவன், கிட்டி, குக்கூ வித் கோமாளி சக்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மத கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கும் இஸ்லாமிய குடும்பம். படிக்காத கணவன், பெண்கள் வேலைக்கு செல்ல கூடாது என நினைக்கும் தந்தை, குழந்தைகளை படிக்க வைக்க வேலைக்கு செல்ல நினைக்கும் நாயகி. அவள் சந்திக்கும் பிரச்னை மற்றும் சவால், Cyber Crime-ன் ஆபத்து  ஆகியவையே ஃபர்ஹானா.

தன்னை போல தன் குழந்தைகள் கஷ்டப்பட கூடாது என நினைக்கும் ஃபர்ஹானா, கணவனின் அனுமதியுடன் தோழியின் உதவியால் தனியார் வங்கியின் கால் சென்டரில் வேலைக்கு சேர்கிறாள். அதன் பின் அந்த குடும்பத்தின் வறுமை கொஞ்சம் கொஞ்சமாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் தன் தோழிகளை போல அதிக ஊக்க தொகை கிடைக்கும் வேறு ஒரு பிரிவுக்கு மாறுகிறார். ஆனால் அங்கு பெரும் பிரச்னை காத்திருக்கிறது. அதில் இருந்து எப்படி வெளியே வருகிறாள்? பிரச்னையை கணவன் எப்படி கையாண்டான்? தந்தையின் மனநிலை என்ன? என்பவை திரைக்கதையில் அடுத்தடுத்து விரிவடைகின்றன.

மத கட்டுப்பாடுகளுடன், தந்தை, கணவன், குடும்பம் என வாழும்  இஸ்லாமிய பெண்களின் எதார்த்தமான பிரதிபலிப்பை ஃபர்ஹானா கதாபாத்திரம் மூலமாக திரையில் கனகச்சிதமாக காட்டியுள்ளார் இயக்குனர். குறிப்பாக,  அவர்களின் எதிர்பார்ப்பு, மனநிலை, நியமான ஏக்கம் ஆகியவை சில இடங்களில் காட்சியாகவும், சில இடங்களில் வசனங்களாகவும் மனதில் பதிந்து செல்கின்றன.

பெண்கள் முன்னேற்றத்தை மையப்படுத்தி நகரும் கதை, ஒரு கட்டத்தில் த்ரில்லராக மாறுகிறது. அதில் எந்த குழப்பமும் இல்லாமல் திரைக்கதை நகர்த்தியுள்ளார் இயக்குனர். இருப்பினும் இன்னும் சற்று விறு விறுப்பாக்க முயற்சித்திருக்கலாம்.

இதில் ஃபர்ஹானாவாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், ஒரு இஸ்லாமிய பெண்ணாவே வாழ்ந்துள்ளார். அவரின் காக்கா முட்டை, கனா ஆகிய படங்களின் வரிசையில் இதுவும் இடம்பிடிக்கும். ஐஸ்வர்யா ராஜேஷின் கணவனாக நடித்துள்ள ஜித்தன் ரமேஷ் நடிப்பில் பிரமாதப்படுத்தியுள்ளார். அப்பாவிதனம், இயலாமை, மனைவியின் மீதான அன்பு ஆகியவற்றை மிக இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். இவர்கள் இருவரையும் தூக்கி சாப்பிடுவதுபோல் கிட்டி நடித்துள்ளார்.

நடிகர்களைத் தவிர தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு பாராட்டத்தக்கது. அதுவும் குறுகலான சாலை, நெரிசல் மிகுந்த குடியிருப்புகள் கொண்ட திருவல்லிக்கேணி பகுதியை நேர்த்தியாக ஒளிப்பதிவாளர் படம்பிடித்துள்ளார். அதேபோல் ஐஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலம். காட்சிகளுக்கான வலிமையை இசையால் மெருகேற்றியுள்ளார். இவர்களை போல சாபு ஜோசப்பின் படத்தொகுப்பும் முக்கியம். இயக்குனரின் எண்ணத்தை அழகாக தொகுத்து கொடுத்துளார். மேலும் வசனம் மற்றுன் கலை இயக்கம் இரண்டும் எதார்த்தம்.

படத்தில் ஏராளமான பாசிட்டிவ் விஷயங்கள் உள்ளன.

இருந்தாலும் சில குறைகளும் தென்படுகின்றன. இந்தப் படத்தில் கால் செண்டர் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் அங்கு இடம்பெறும் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். அதை சற்று குறைத்திருக்கலாமோ என தோன்ற வைக்கிறது.

இஸ்லாம் மதத்திற்கு எதிரானது இல்லை ஃபர்ஹானா படம் - படக்குழு விளக்கம்!

top videos

    அதேபோல் வில்லனாக காட்டப்படும் தயாளன்  கதாபாத்திரத்தின் மீது பார்வையாளர்களுக்கு கோபத்தை உருவாக்க ஃபர்ஹானா தவறுகிறது. இதனால் ஒரே நேர்கோட்டில் திரைக்கதை செல்வது போல உள்ளது. மேலும், ஃபர்ஹானா, தயாளன் இருவருமே Victims என்று தோன்ற வைத்துவிடுகிறது. கணவன், மனைவி கஷ்டங்களை மட்டும் பேசிக்கொள்ள கூடாது, அனைத்தையும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதை விளக்கியுள்ளது. சர்ச்சைகள் இல்லாமல் சிறகடித்து பறக்கும் ஒரு பறவை ஃபர்ஹானா.

    First published:

    Tags: Aiswarya Rajesh