முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Video : இதெல்லாம் ஒரு டான்ஸ் ஸ்டெப்பா? சல்மான் கான் நடனத்தை பங்கமாய் கலாய்க்கும் ரசிகர்கள்..!

Video : இதெல்லாம் ஒரு டான்ஸ் ஸ்டெப்பா? சல்மான் கான் நடனத்தை பங்கமாய் கலாய்க்கும் ரசிகர்கள்..!

சல்மான் கான்

சல்மான் கான்

'கிசி கா பாய் கிசி கி ஜான்' படத்தில் சல்மான் கானின் டான்ஸ் ஸ்டெப் வீடியோ பகிர்ந்து ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சல்மான்கான் நடிப்பில் உருவாகியுள்ள 'கிசி கா பாய் கிசி கி ஜான்' என்ற படம் வருகிற ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படம் தமிழில் சிவா இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான வீரம் படத்தின் இந்தி ரீமேக் என்று கூறப்படுகிறது.

ஃபார்ஹாத் சம்ஜி இயக்கியுள்ள இந்தப் படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஜெகபதி பாபு, பூமிகா, மாளவிகா சர்மா, அபிமன்யூ சிங், சித்தார்த் நிகம் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

வி. மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு கேஜிஎஃப் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் பின்னணி இசையமைத்துள்ளார். மேலும் இந்தப் படத்தின் பாடல்களுக்கு ரவி பஸ்ரூர், ஹிமேஷ் ரேஷ்மியா, தேவி ஸ்ரீ பிரசாத், அமால் மாலிக், பாயல் தேவ், சஜித் கான் உள்ளிட்டோர் இசையமைத்துள்ளனர்.

பிரபல காமெடி நடிகர் மாரடைப்பால் மரணம்... திரையுலகினர் சோகம்...!

இந்தப் படத்திலிருந்து என்டம்மா என்ற பாடல் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இந்தப் பாடலில் சல்மான் கான், வெங்கடேஷ் ஆகியோருடன் ராம் சரண் இணைந்து நடனமாடியிருந்தார். இந்தப் பாடலில் மூவரும் தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக வேட்டி சட்டையுடன் நடனமாடியிருந்தனர். ஆனால் பாடலில் நடன அமைப்பு கொச்சையாக இருப்பதாகவும் தமிழ் கலாச்சாரத்தை அவமதித்துள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் இப்பட பாடல் ஒன்றில் சல்மான் கான் தனது வேட்டியை தூக்கிக்கொண்டு ஆடும் டான்ஸ் ஸ்டெப் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. என்னடா டான்ஸ் ஸ்டெப் இது என ரசிகர்கள் இந்த வீடியோவை பகிர்ந்து கலாய்த்து வருகின்றனர். இந்தப் பாடலுக்கு நடன இயக்குநர் ஜானி நடனம் அமைத்திருக்கிறார். ஜானி நடன இயக்குநராக பணியாற்றிய தமிழில் வெளியான பாடல்களும் இதுபோல விமர்சனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Salman khan