முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 22 ஆண்டுகளாக லியோ, ரோலெக்ஸை ஃபாலோ பண்ணும் ஏஜெண்ட் டீனா... இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே..!

22 ஆண்டுகளாக லியோ, ரோலெக்ஸை ஃபாலோ பண்ணும் ஏஜெண்ட் டீனா... இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே..!

சூர்யா - வசந்தி - விஜய்

சூர்யா - வசந்தி - விஜய்

விக்ரம் படத்தில் ஏஜெண்ட் டீனாவாக நடித்த வசந்தி அடிப்படையில் ஒரு நடனக் கலைஞர். 90கள் மற்றும் 2000த்தின் முற்பகுதிகளில் ஏராளமான படங்களின் பாடல்களில் நடனமாடியிருக்கிறார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துவரும் லியோ படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் சமீபத்தில் நிறைவடைந்தது. படக்குழுவினர் காஷ்மீரில் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசிய வீடியோவை தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் வெளியிட்டிருந்தது. இதனையடுத்து இந்தப் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் துவங்கப்படவிருக்கிறது.

இந்தப் படம் குறித்த அப்டேட்டுகளை தயாரிப்பு நிறுவனம் உடனுக்குடன் வெளியிட்டு வருகிறது. இருப்பினும் ரசிகர்களின் ஒரு கேள்விக்கு மட்டும் இன்னும் விடை கிடைத்தபாடில்லை. இந்தப் படம் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் அடிப்படையில் உருவாகிறதா அல்லது தனிப்படமாக உருவாகிறதா என்பது தான் அந்த கேள்வி. பட பூஜையின் போது கைதி படத்தில் நெப்போலியன் என்ற போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருந்த மரியம் ஜார்ஜ் கலந்துகொண்டிருந்தார்.


மேலும் படக்குழு காஷ்மீர் சென்றபோது படக்குழுவுடன் விக்ரம் படத்தில் ஏஜெண்ட் டீனாவாக கலக்கிய வசந்தியும் இடம்பெற்றிருந்தார். இதனால் லியோ படம் எல்சியூவில் இடம்பெற்றுள்ளதாக ரசிகர்கள் டிகோட் செய்தனர். விக்ரம் படத்தில் ஏஜெண்ட் டீனாவாக நடித்த வசந்தி அடிப்படையில் ஒரு நடனக் கலைஞர். 90கள் மற்றும் 2000த்தின் முற்பகுதிகளில் ஏராளமான படங்களின் பாடல்களில் நடனமாடியிருக்கிறார்.

இதையும் படிக்க | சூர்யாவுடன் மோதத் தயாராகும் நடிகர் மகேஷ் பாபு? - கடுமையாகும் போட்டி..!

விக்ரம் படத்தின் போதே விஜய்யின் பகவதி படத்தின் அள்ளு அள்ளு பாடலிலும், அஜித்தின் வில்லன் படத்தின் அடிச்சா நெத்தியடி பாடலிலும் ஒரே காஷ்டியூமுடன் நடனமாடியதாக ரசிகர்கள் டீகோட் செய்திருந்தனர். இந்த நிலையில் விஜய் , சூர்யா இணைந்து நடித்திருந்த பிரெண்ட்ஸ் பட  ‘ருக்கு ருக்கு’  பாடலில் நடனமாடியிருந்தார். இதனை வீடியோ க்ளிப்பாக பகிர்ந்த ரசிகர் ஒருவர் லியோவையும் ரோலெக்ஸையும் ஏஜெண்ட் டீனா 22 வருடங்களாக பின் தொடர்வதாக ஜாலியாக குறிப்பிட்டிருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலாகிவருகிறது.

First published:

Tags: Actor Suriya, Actor Thalapathy Vijay