முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பத்து தல பாடல் இளையராஜா பாடலின் காப்பியா? இணையத்தில் புது சர்ச்சை!

பத்து தல பாடல் இளையராஜா பாடலின் காப்பியா? இணையத்தில் புது சர்ச்சை!

ஏ.ஆர்.ரஹ்மான் - சிம்பு - இளையராஜா

ஏ.ஆர்.ரஹ்மான் - சிம்பு - இளையராஜா

இந்தப் பாடல் சிம்பு பாட வேண்டியது எனவும் அவர் ஊரில் இல்லாததால் தான் பாடியதாகவும் இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்திருந்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை படங்களின் இயக்குநர் ஒபேலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம் பத்து தல. ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.

இந்தப் படம் வருகிற 30 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. கன்னடத்தில் சிவராஜ்குமார் நடித்துள்ள மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக்கான இந்தப் படத்தில் பிரியா பவானி ஷங்கர், கலையரசன், டிஜே அருணாச்சலம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். சில்லுனு ஒரு காதல் படத்துக்கு பிறகு இயக்குநர் கிருஷ்ணா - ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் இடம்பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய நம்ம சத்தம் பாடல் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப் பாடல் சிம்பு பாட வேண்டியது எனவும் அவர் ஊரில் இல்லாததால் தான் பாடியதாகவும் இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்தப் பாடல் சமீபத்தில் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. இந்தப் பாடலின் பல்லவி இளையராஜா இசையமைத்த தாயம்மா படத்தின் ஒரு முத்துக்கிளி கத்து என்ற பாடலைப் போன்றுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். இதனையடுத்து இளையராஜா ரசிகர்களும் ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கருத்து மோதல்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

top videos

    மற்றொரு பக்கம் இளையராஜா இசையில் விடுதலை படத்தின் காட்டு மல்லி பாடல், அவர் ஏற்கனவே இசையமைத்த என் மன வானில் படத்தில் இடம்பெற்ற என்ன சொல்லி பாடுவதோ என்ற பாடல்போன்று உள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

    First published:

    Tags: AR Rahman, Ilaiyaraja