முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / எதிர்நீச்சல் சீரியல் அரசு-க்கும் நடிகை மனோரமாவிற்கும் இப்படி ஒரு சம்மந்தமா?

எதிர்நீச்சல் சீரியல் அரசு-க்கும் நடிகை மனோரமாவிற்கும் இப்படி ஒரு சம்மந்தமா?

எதிர்நீச்சல் சீரியல் அரசு

எதிர்நீச்சல் சீரியல் அரசு

எதிர்நீச்சல் சீரியலில் பல ரசிகர்களால் பாராட்டப்படும் மற்றும் கலாய்க்கப்படும் கேரக்டராக குணசேகரன் கேரக்டர் இருக்கிறது. அந்த குணசேகரன் கேரக்டருக்கு டஃப் கொடுத்து கேரக்டராக அரசு கேரக்டர் இருந்து வருகிறார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சன் தொலைக்காட்சியில் பலவகையான சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், இன்று வரையிலும் பலரது நினைவை விட்டு நீங்காத சீரியலாக பார்வையாளர்கள் மனதில் இடம் பெற்றிருக்கிறது கோலங்கள் சீரியல். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த தேவயாணி நடிப்பில் வெளியான கோலங்கள் சீரியல் 2003-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை வெற்றிகரமாக ஒளிபரப்பானது.

கோலங்கள் சீரியலை இயக்கியது மட்டுமில்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் திருச்செல்வம் நடித்திருந்தார். அபி என்கிற கதாபாத்திரத்தில் தேவயானியும், தொல்காப்பியம் கதாபாத்திரத்தில் திருச்செல்வமும் நடித்திருந்தனர்.

இந்நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு திருச்செல்வம் மீண்டும் சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியலை இயக்கி வருகிறார். கடந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் இரவு 9.30 மணிக்கு தொடர் ஒளிபரப்பாகி வரும் இத்தொடரில் மதுமிதா, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்ரியா, மாரிமுத்து, சபரி பிரசாந்த், கமலேஷ், விபு ராமன், சத்யபிரியா, பாம்பே ஞானம், கிரி துவாரகேஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். நடிப்பு என்பதை விட கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களாக வாழ்ந்து வருகிறார்கள் என்றால் மிகையாகாது.

தமிழ் சின்னத்திரை வரலாற்றில் ஆயிரக்கணக்கான சீரியல்கள் வந்து போனாலும், சில தொடர்களை பார்வையாளர்களால் மறக்கவே முடியாது. பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி, நிஜ வாழ்க்கையில் மிகச்சில மாற்றங்களையாவது அவைகள் செய்திருக்கும். அந்த வரிசையில் தற்போது எதிர்நீச்சல் சீரியல் பார்வையாளர்களை, வெகுவாக ஈர்த்திருப்பதோடு சிந்திக்கவும் வைத்திருக்கிறது.

Also read... சினிமாவில் என்னோட இன்ஸ்பிரேஷன் இந்த நடிகைகள் தான் - ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

எதிர்நீச்சல் சீரியலில் பல ரசிகர்களால் பாராட்டப்படும் மற்றும் கலாய்க்கப்படும் கேரக்டராக குணசேகரன் கேரக்டர் இருக்கிறது. அந்த குணசேகரன் கேரக்டருக்கு டஃப் கொடுக்கும் கேரக்டராக அரசு கேரக்டர் இருந்து வருகிறார். அந்த அரசு ஏற்கனவே சின்னத்திரையில் பல சீரியல் நடித்திருக்கிறார்.

எதிர்நீச்சல் அரசுவின் உண்மையான பெயர் கிரி துவாரகிஷ். இவர் பெங்களூரில் இருந்து எட்டு வயசில் சென்னைக்கு வந்து விட்டாராம். சென்னையில் உள்ள ஆதர்ஷ் வித்யாலயா ஸ்கூலில் தான் தன்னுடைய பள்ளி படிப்பை முடித்து இருக்கிறார். நான் இந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்திருக்கிறேன் என்றால் அது நடிகை மனோரமாவின் ஆதர்ஷ் வித்யாலயா பள்ளியில் படித்ததால் தான் என்று அரசு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial