முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / போனி கபூரின் காரிலிருந்து 66 கிலோ எடையுள்ள வெள்ளிப்பொருட்கள் பறிமுதல் - தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை - பரபரப்பு சம்பவம்

போனி கபூரின் காரிலிருந்து 66 கிலோ எடையுள்ள வெள்ளிப்பொருட்கள் பறிமுதல் - தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை - பரபரப்பு சம்பவம்

போனி கபூர்

போனி கபூர்

தயாரிப்பாளர் போனி கபூர் காரிலிருந்து 66 கிலோ எடையுள்ள வெள்ளிப் பொருட்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவரும் பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர் தமிழில் நேர்கொண்ட பார்வை, வலிமை, வீட்ல விசேஷம், நெஞ்சுக்கு நீதி, துணிவு போன்ற பல திரைப்படங்களைத் தயாரித்திருக்கிறார். தற்போது அஜய் தேவ்கன் நடிப்பில் மைதான் என்ற ஹிந்தி படத்தை தயாரித்திருக்கிறார்.

இந்த நிலையில் கர்நாடகாவில் புனே - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்த கார் ஒன்றை தேர்தல் அதிகாரிகள் நிறுத்தி பரிசோதனை செய்திருக்கின்றனர். அப்போது அந்த காரில் 66 கிலோ எடையுள்ள வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்திருக்கின்றனர். அதன் மதிப்பு ரூ.33 லட்சம் என்று கூறப்படுகிறது.

அதில் வெள்ளி தட்டுகள், ஸ்பூன், கின்னங்கள், டம்ளர்கள் உள்ளிட்டவை இருந்துள்ளன. இந்தக் காரை ஹரி சிங் ஓட்டி வந்துள்ள நிலையில், சுல்தான் கான் என்பவர் உடனிருந்திருக்கிறார். அவர்களிடம் வெள்ளிப் பொருட்களுக்கான உரிய ஆவணங்கள் இல்லை என்று கூறப்படுகிறது.

விசாரணையில் இந்தக் கார் போனி கபூரின் தயாரிப்பு நிறுவனமான பேவியூ புரொஜெக்ட் நிறுவனத்துக்கு சொந்தமானது என தெரியவிந்திருக்கிறது. இதனையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

top videos
    First published:

    Tags: Boney Kapoor