முகப்பு /செய்தி /entertainment / சட்டவிரோத பணப் பரிமாற்ற புகார்... லைகா நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் திடீர் ரெய்டு..!

சட்டவிரோத பணப் பரிமாற்ற புகார்... லைகா நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் திடீர் ரெய்டு..!

சோதனை நடைபெறும் இடம்

சோதனை நடைபெறும் இடம்

ED Investigates LYCA Productions | லைகா நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான புகாரில் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கத்தி, எந்திரன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்துள்ள லைகா தயாரிப்பு நிறுவனம், தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் லால் சலாம், கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 உள்ளிட்ட படங்களை தயாரித்து வருகிறது.

இந்நிலையில், லைகா நிறுவனம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை தியாகராய நகரில் உள்ள லைகா தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் காலை முதல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க... காலைத் தொட்டு வணங்கும் காட்சி.. கடுப்பான நடிகை.. பழைய சினிமாவில் பரபர சம்பவம்!

' isDesktop="true" id="979571" youtubeid="dhDGSZv5mGY" category="cinema">

top videos

    இதேபோன்று அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    First published:

    Tags: Enforcement department, Lyca