முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Video: ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’  படத்திலிருந்து வெளியானது முதல் பாடல்!

Video: ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’  படத்திலிருந்து வெளியானது முதல் பாடல்!

தௌலத்தான ரவுடி

தௌலத்தான ரவுடி

Dowlathana Rowdy Lyrical Video : இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிக்கு காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் என்ற படத்திலிருந்து தௌலத்தான ரவுடி பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

'விருமன்' படத்திற்கு பிறகு முத்தையா இயக்கும் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் என்ற புதிய படத்தில் நடிக்கிறார் ஆர்யா. ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகை சித்தி இதானி நாயகியாக ஒப்பந்தமாகியுள்ள இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றது. இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஆக்‌ஷன் என்டர்டெய்னராக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடந்து வருகிறது.

ஒரு கிராமத்தில் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களின் நல்லிணக்கத்தை அரசியல்வாதிகள் ஓட்டுக்காக எப்படி கெடுக்க முயற்சிக்கிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் கதை எனக் கூறப்படுகிறது. இதில் ஆர்யா முஸ்லிம் இளைஞராக நடிக்கிறார். இந்நிலையில் இந்தப் படத்தின் தௌலத்தான ரவுடி முதல் லிரிக்கல் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

' isDesktop="true" id="938961" youtubeid="xquX5JAT5Pw" category="cinema">

top videos

    நன்றி: Junglee Music Tamil.

    First published:

    Tags: Lyrical Video Songs