சிம்புவுடன் குத்து படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கன்னட நடிகை ரம்யா. தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் அர்ஜுன் நடித்த கிரி, தனுஷுடன் பொல்லாதவன், தூண்டில் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். சூர்யாவுக்கு ஜோடியாக வாரணம் ஆயிரம் படத்தில் அவரது நடிப்புக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வரும் திவ்யா கர்நாடகா மாநிலம் மாண்டியா தொகுதியில் எம்பியாக சேவையாற்றினார். தற்போது கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக பணியாற்றிவருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தனக்கு தற்கொலை எண்ணங்கள் ஏற்பட்டதாகவும், அந்த நேரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆதரவாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
அந்தப் பேட்டியில், என் அப்பா இறந்து வாரம் கழித்து நான் நாடாளுமன்றத்தில் இருந்தேன். எனக்கு அங்கு யாரையும் தெரியாது. அவை நடவடிக்கைகள் குறித்து எதுவும் தெரியாது. மெதுவாக எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு பணியாற்றினேன். மாண்டியா தொகுதி மக்கள் எனக்கு நம்பிக்கை அளித்தார்கள்.
என் தந்தை இறந்தபோது எனக்கு தற்கொலை எண்ணம் ஏற்பட்டது. அப்போது ராகுல் காந்தி எனக்கு ஆதரவாக இருந்தார். என் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் முக்கியமானவர் என் அம்மா. அதற்கடுத்து என் அப்பா. மூன்றாவது ராகுல் காந்தி என்று பேசினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Divya Spandana, Rahul Gandhi