ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை படத்தின் முதல் பாகம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. சூரி இந்தப் படத்தின் கதையின் நாயகனாக நடிக்க, விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இளையராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.
மேலும் இந்தப் படத்தில் சூரிக்கு ஜோடியாக ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நடித்துள்ள நிலையில், ராஜீவ் மேனன், கௌதம் மேனன், தமிழ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்துக்கு திரையுலக பிரபலங்கள் அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.
விடுதலை படம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், தோழர் வெற்றி மாறன் அவர்கள் ஒரு படைப்பாளராக மட்டுமின்றி வர்க்க முரண்களை விவரிக்கும் பேராசிரியராகவும் வெளிப்படுகிறார்.
Our Producer @elredkumar sir & Director #VetriMaaran sir showed their gratitude to Maestro@ilaiyaraaja sir after the tremendous response to our film ❤️
Grab your tickets https://t.co/nge8tFIGUg #ViduthalaiPart1SuperHIT@VijaySethuOffl @sooriofficial @BhavaniSre @Chetan_k_a pic.twitter.com/UXOolflryr
— RS Infotainment (@rsinfotainment) April 1, 2023
மக்களை அமைப்பாக்குவதும் அரசியல்படுத்துவதும் இன்றியமையாத ஒரு தேவை என்பதை உணர்த்துகிறார். வழக்கம் போல இது 'வெற்றிமாறன் படைப்பு' என முத்திரை பதித்துள்ளார். வெல்க விடுதலை! என்று குறிப்பிட்டிருந்தார்
விடுதலை படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ஆகியோர் இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Director vetrimaran, Ilaiyaraja