முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / “திரையரங்கில் தீண்டாமையை கடைப்பிடித்தது ஆபத்தான போக்கு..” இயக்குநர் வெற்றிமாறன் கண்டனம்

“திரையரங்கில் தீண்டாமையை கடைப்பிடித்தது ஆபத்தான போக்கு..” இயக்குநர் வெற்றிமாறன் கண்டனம்

இயக்குநர் வெற்றிமாறன்

இயக்குநர் வெற்றிமாறன்

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் நேற்று பத்து தல படத்திற்கு நரிக்குறவர்களை அனுமதிக்க மறுத்ததற்கு இயக்குநர் வெற்றிமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை ரோகிணி திரையரங்கில் பத்து தல' திரைப்படத்தை காண டிக்கெட் எடுத்துக்கொண்டு 6 சிறுவர்களுடன் சென்ற 10 பேரை மட்டும், திரையரங்க ஊழியர்கள் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும், அவர்கள் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதற்காக டிக்கெட் வைத்திருந்தும் உள்ளே அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இச்சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ரோகிணி திரையரங்கம் சார்பில் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் U/A சான்று பெற்ற 'பத்து தல' படத்திற்கு சிறுவர்களை அழைத்து வந்ததால் அனுமதிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ரோகிணி திரையரங்கில் படம் பார்க்க வந்த தங்களை அனுமதிக்காதது இது முதல் முறையல்ல என்று நரிக்குறவ பெண்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு வாரிசு, துணிவு உள்ளிட்ட படங்களை பார்க்க வந்த போதும் வெளியேற்றப்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பத்து தல படம் பார்ப்பதற்கான டிக்கெட் இருந்தும்  நரிக்குறவர் மக்களை அனுமதிக்காததை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இந்த சம்பவத்திற்கு பிரபலங்கள் உட்பட பலரும் அவர்களின் கண்டன குரல்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி வருவதை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது, நூறு ஆண்டுகளுக்கு முன்பாக தீண்டாமையை உடைத்தெறிந்தது திரையரங்கம். ஆனால் இன்று உழைக்கும் எளிய மக்களை உள்ளே அனுமதிக்காமல் தீண்டாமையை கடைபிடித்தது ஆபத்தான போக்கு. எதிர்ப்பின் காரணமாக பின்னர் அனுமதி தந்திருந்த போதிலும், இப்படி ஒரு நிகழ்வு நடந்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Director vetrimaran, Tamil News