முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மலையாள படத்தைப் பார்த்து எழுதியதுதான் கஸ்டடி - இயக்குநர் வெங்கட் பிரபு ஓபன் டாக்!

மலையாள படத்தைப் பார்த்து எழுதியதுதான் கஸ்டடி - இயக்குநர் வெங்கட் பிரபு ஓபன் டாக்!

இயக்குநர் வெங்கட் பிரபு

இயக்குநர் வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியிருக்கும் திரைப்படம் கஸ்டடி. இந்த திரைப்படத்தில் நாக சைதன்யா, சரத்குமார், அரவிந்த்சாமி, பிரியாமணி, கிரித்தி ஷெட்டி, பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

நாக சைதன்யா நடிப்பில் தான் இயக்கி இருக்கும் கஸ்டடி திரைப்படத்தின் கதையை மலையாள படத்தை பார்த்து உருவாக்கியதாக இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியிருக்கும் திரைப்படம் கஸ்டடி. இந்த திரைப்படத்தில் நாக சைதன்யா, சரத்குமார், அரவிந்த்சாமி, பிரியாமணி, கிரித்தி ஷெட்டி, பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இதற்கான Pre Release நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் படக் குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

வெங்கட் பிரபுவின் படம் போல, இந்த நிகழ்ச்சியும் ஜாலியாகவே நடைபெற்றது. அதுவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரியாமணி பிரேம்ஜியுடன் செல்ஃபி எடுக்க வேண்டும் என கூறி, அவருடன் நடனமும் ஆடினார்.

இதன்பின் பேசிய பிரியாமணி,  கஸ்டடி திரைப்படத்திற்கு பின்பு தமிழில் ஏராளமான வாய்ப்பு தனக்கு கிடைக்கும் என கூறினார். பிரியாமணியை போலவே, பிரேம்ஜியுடன் செல்ஃபி எடுக்கும் வாய்ப்பு தனக்கு கிடைக்கவில்லை என படத்தின் நாயகி கிரித்தி ஷெட்டியும் வருத்தப்பட்டார். அவருடனும் செல்ஃபி எடுத்துக் கொண்டார். அதைத்தொடர்ந்து தன்னுடன் நடனமாட சிறப்பு விருந்தினர் இயக்குனர் லிங்குசாமியை கிருத்தி ஷெட்டி மேடைக்கு அழைத்தார். ஆனால் அவருடைய அழைப்பை லிங்குசாமி ஏற்கவில்லை. அந்த வாய்ப்பை பிரேம்ஜி பயன்படுத்திக்கொண்டார்.

கஸ்டடி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சரத்குமார் பேசுகையில், படத்தில் இடம்பெறும் விஷயங்களை பற்றி இயக்குனர் அனுமதிக்கவில்லை. இதனால் படத்தில் நடித்த அனுபவத்தையும், படத்தை பற்றியும் நக்கல் கலந்த நகைச்சுவையுடன் பேசி கலாய்த்தார் சரத்குமார்.

Also read... விக்ரம் வேதா முதல் தஹாத் வரை.. இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் லிஸ்ட்.!

இயக்குனர் வெங்கட் பிரபு பேசுகையில் கஸ்டடி திரைப்படத்தின் கதையை மலையாளத்தில் வெளியான நயட்டு படத்தை பார்த்து எழுதியதாக நேர்மையுடன் ஒத்துக் கொண்டார். மேலும் இந்தப் படம் ரசிகர்களுக்கு வித்தியாமான அனுபவத்தை கொடுக்கும் எனவும் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய நாக சைதன்யா இதுபோன்ற வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என நெகழ்ச்சி அடைந்தார். கஸ்டடி மூலம் தமிழ் ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறியதாகவும் தெரிவித்தார்.

தமிழ் - தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த நேரடி திரைப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாகிறது. மாநாடு போல இந்த திரைப்படமும் வெங்கட் பிரபுவிற்கு வெற்றியை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Venkat Prabhu