வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் ‘கஸ்டடி’ மூலம் தமிழுக்கு வருகிறார், தெலுங்கு ஹீரோ நாக சைதன்யா. வரும் 12-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி ஹீரோயின். அரவிந்த்சாமி, சரத்குமார், பிரியாமணி, பிரேம்ஜி அமரன் உட்பட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன், ஸ்ரீனிவாசா சித்தூரி புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியிருக்கும் திரைப்படம் கஸ்டடி. இதற்கான Pre Release நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் படக் குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். வெங்கட் பிரபுவின் படம் போல, இந்த நிகழ்ச்சியும் ஜாலியாகவே நடைபெற்றது.
இயக்குனர் வெங்கட் பிரபு பேசுகையில், நாக சைதன்யாவிற்கு தமிழ்ல சிறப்பான அறிமுகமா இந்தப் படம் இருக்கும். அவர் கூட வேலை பார்த்தது ரொம்ப வசதியா இருந்தது. அழகா தமிழ்ப் பேசினார். அதனால வேலை வாங்குறது எளிமையா இருந்துச்சு. எனக்கு தெலுங்கு தெரியாது. தெலுங்கு மட்டுமே பேசுகிற ஹீரோவா இருந்தா கஷ்டமா இருந்திருக்கும். தமிழ் பேசினதால புரிஞ்சுகிட்டு வேலை பார்க்கிறது நல்லா இருந்தது என்று தெரிவித்திருந்தார்.
Also read... மாவட்ட வாரியாக இதுதான் பிளான்.. விஜய் போட்ட திட்டம்.. வெளியானது மாஸ் தகவல்!
மேலும் கஸ்டடி திரைப்படத்தின் கதையை மலையாளத்தில் வெளியான நயட்டு படத்தை பார்த்து அந்த தாக்கத்தில் எழுதியதாக நேர்மையுடன் ஒத்துக் கொண்டார். மேலும் இந்தப் படம் ரசிகர்களுக்கு வித்தியாமான அனுபவத்தை கொடுக்கும் எனவும் கூறினார்.
Hehehehehe not true bro:))) everyone will know it tomorrow. U got it wrong of what I ACTUALLY said!! Please do watch it and lemme know tomorrow #CustodyFromTomorrow https://t.co/kZg4h5VmXV
— venkat prabhu (@vp_offl) May 11, 2023
இந்நிலையில் தற்போது ட்விட்டரில் ஒருவர் வெங்கட் பிரபுவின் கஸ்டடி படம் மலையாளத்தில் வெளியான நயட்டு படத்தின் இன்ஸ்பரேஷனில் உருவானது என்று பதிவிட்டிருந்தார். அந்த பதிவிற்கு பதிலளித்துள்ள வெங்கட் பிரபு, அது உண்மை இல்ல ப்ரோ.. எல்லாருக்கும் நாளை தெரியும். நான் கூறியதை நீங்கள் அனைவரும் தவறாக புரிந்துகொண்டீர்கள். அதனால், தயவு செய்து படத்தை பார்த்துவிட்டு பேசுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Venkat Prabhu