காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை என தமிழின் சில முக்கிய படைப்புகளைக் கொடுத்தவர் இயக்குநர் செல்வராகவன். கடைசியாக தனுஷை வைத்து நானே வருவேன் படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
தற்போது தமிழ் சினிமாவின் முழு நேர நடிகராக மாறியிருக்கிறார். நடிகர் விஜய்யின் பீஸ்ட், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான சாணிக் காயிதம் படங்களில் செல்வராகவனின் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. தற்போது விஷாலுடன் மார்க் ஆண்டனி படத்தில் செல்வராகவன் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார்.
இதையும் படிக்க | Video: மனோபாலா மறைவு... நடிகர் விஜய் நேரில் அஞ்சலி... மகன் கையைப் பிடித்து ஆறுதல்..!
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் செல்வராகவனின் காதல் கொண்டேன் படம் குறித்து ட்விட்டரில், ''விவேக் ஒரு காமெடியில் சொல்வார் இயக்குநர் ஒவ்வொரு ஃப்ரேமையும் செதுக்கியிருக்கிறார் என. அப்படி ஒரு படம்'' என்று பதிவிட்டிருந்தார். அவரது பதிவில் தவறுதலாக செதுக்கியிருக்கிறார் என்பதற்கு பதிலாக செத்துக்கிருக்கார் எனக் குறிப்பிட்டிருந்தார்.
Why my friend ? I'm not dead or retired. I have just spent some time for myself. I'm just in my forties .. And I'm back. https://t.co/CYdLcoG97k
— selvaraghavan (@selvaraghavan) May 3, 2023
இதனை தவறாக புரிந்துகொண்ட செல்வராகவன் அவருக்கு அளித்து பதிலில், ''ஏன் நண்பா, நான் சாகவும் இல்லை. ஓய்வை அறிவிக்கவும் இல்லை. நான் தற்போது எனக்காக சில நேரங்களை செலவழித்து வருகிறேன். நான் 40களில் இருக்கிறேன். விரைவில் திரும்ப வருவேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு ரசிகரின் தவறை சுட்டிக்காட்டிவருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Selvaraghavan