முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பிக்பாஸை டைரக்ட் பண்ணது சிவகார்த்திகேயன் பட இயக்குநரா ? ஆச்சரியத்தில் ரசிகர்கள்

பிக்பாஸை டைரக்ட் பண்ணது சிவகார்த்திகேயன் பட இயக்குநரா ? ஆச்சரியத்தில் ரசிகர்கள்

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

பிக்பாஸில் கமல்ஹாசனுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து பிரபல இயக்குநர் பகிர்ந்த தகவல் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கமல்ஹாசன் தயாரிப்பில் தற்போது சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை ரங்கூன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க, ஜி.வி.பிரகாஷ்குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படம் சமீபத்தில் பூஜையுடன் துவங்கியது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விருது விழாவில் கமல்ஹாசன் மற்றும் ராஜ்குமார் பெரியசாமி கலந்துகொண்டிருந்தனர். அப்போது ராஜ்குமார் பெரியசாமியிடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசனை இயக்கிய அனுபவம் குறித்து கேட்கப்பட்டது.

இதையும் படிக்க | நாக சைதன்யாவுடன் காதலா? கொதித்து பேசிய பொன்னியின் செல்வன் நடிகை

அப்போது பேசிய அவர், ''கமல்ஹாசனுக்கு டைரக்டர்னு ஒருத்தர் தேவையில்லை. இதுவரை நான் வொர்க் பண்ணதுல, இவரை ஹேண்டில் பண்றது மிக சுலபம். ரொம்ப ஸ்வீட். புதிய தலைமுறையினருக்கு இலகுவாக நடந்து கொள்வார்.

அவரால ஒரு இடையூறு, தாமதம் வந்தது இல்ல. ஒரு இடத்துல கூட அவர் முகம் கடுமையாக நடந்துக்கிட்டது இல்ல. தொழில் தர்மம், அரப்பணிப்பு அவர் என்ன வேல பண்ணாலும் இருக்கும் என்று பேசினார். இதனையடுத்து பிக்பாஸை டைரக்ட் பண்ணது இவரா என ரசிகர்கள் ஆச்சரியம் தெரிவித்துவருகிறார்கள்.

First published:

Tags: Sivakarthikeyan