முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மலையாள படங்கள் என்றாலே ஆபாச படங்கள் என்ற நிலையை மாற்றியவர்கள் மோகன்லால் - மம்மூட்டி - சொன்னது யார் தெரியுமா?

மலையாள படங்கள் என்றாலே ஆபாச படங்கள் என்ற நிலையை மாற்றியவர்கள் மோகன்லால் - மம்மூட்டி - சொன்னது யார் தெரியுமா?

மோகன்லால் - மம்மூட்டி

மோகன்லால் - மம்மூட்டி

மலையாள படங்கள் என்றாலே ஆபாச படங்கள் என நினைக்கும் காலம் இருந்தது.

  • Last Updated :
  • Kerala, India

தமிழில் கோபுர வாசலிலே, சிநேகிதியே, லேசா லேசா, காஞ்சிவரம், நிமிர் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் பிரியதர்ஷன். தெலுங்கு, ஹிந்தியிலும் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். ஏராளமான படங்களுக்கு கதை எழுதியுள்ளார்.

தற்போது ஷான் நிகம், ஷைன் டாம் சக்கோ ஆகியோர் நடிப்பில் கொரோனா பேப்பர்ஸ் என்ற பெயரில் திரைப்படம் ஒன்றை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்துக்கு 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களின் இயக்குநர் ஸ்ரீ கணேஷ் கதை எழுதியுள்ளார். இந்தப் படம் வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

இந்தப் பட விழாவில் கலந்துகொண்ட பிரியதர்ஷன் பேசியதாவது, ’மம்மூட்டி, மோகன்லால் இருவரும் மலையாள சினிமாவின் தூண்கள். இவர்கள் இல்லாமல் மலையாள சினிமா இந்த நிலைக்கு உயர்ந்திருக்க முடியாது.

மலையாள படங்கள் என்றாலே ஆபாச படங்கள் என நினைக்கும் காலம் இருந்தது. அந்த எண்ணம் மாறுவதற்கு முக்கிய காரணம் இந்த இருவர் தான். இந்த இருவருமே நமக்கு முன்னோடி என்று பெருமை கொள்ளலாம் என்று பேசினார்.

First published:

Tags: Mammootty, Mohanlal