முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பா.ரஞ்சித் உதவி இயக்குநர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு..

பா.ரஞ்சித் உதவி இயக்குநர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு..

விடுதலை சிகப்பி - பா.ரஞ்சித்

விடுதலை சிகப்பி - பா.ரஞ்சித்

தனது உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்து பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கவிஞரும் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநருமான விடுதலை சிகப்பி என்பவர் கடந்த 30 ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் இந்து கடவுள்களை இழிவுபடுத்தி பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனையடுத்து பாரத் இந்து முன்னணி அமைப்பின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் சுரேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் மீது கலகத்தை தூண்டுதல் எந்த ஒரு மதத்தையும் புண்படுத்தும் நோக்கில் செயல்படுதல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.

இந்த நிலையில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த இலக்கிய நிகழ்வில் மலக்குழி மரணம் எனும் தலைப்பில் கவிஞர் விடுதலை சிகப்பி எனும் விக்னேஷ்வரன் கவிதை வாசித்திருந்தார். அக்கவிதை, நாடு முழுக்க தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் மலக்குழி மரணங்கள் குறித்த அக்கறையை வெளிப்படுத்துவதாகும் அத்தகைய மரணங்களைக் கண்டும் காணாமல் போகும் சமூக நிலையைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்பதற்காகச் சாதாரண மனிதர்களுக்குப் பதில் கடவுள் ஸ்தானத்தில் இருப்பவர்கள் அத்தகைய வேலையை செய்து மரணத்தை தழுவினாலாவது கவனம் பெறுமோ என்கிற பொருளில் அந்தக் கவிதை இருந்தது. எழுத்தாளரின் படைப்பு சுதந்திரம் அது, மற்றபடி எந்த நம்பிக்கையையும் திட்டமிட்டு இழிவாக பேசுவதோ எழுதுவதோ கவிதையின் நோக்கமல்ல.

இதையும் படிக்க |  VIDEO: மனோபாலாவின் இறுதி தருணங்கள் - தந்தைக்காக பாடல் பாடிய மகன் - கண்கலங்க வைக்கும் வீடியோ

பிறப்பால் இந்து ஆதிதிராவிடர் சமூகத்தைச சேர்ந்தவரான விடுதலை சிகப்பி என்கிற விக்னேஸ்வரனை வேற்று மதத்தைச் சேர்ந்தவன் இந்து மதத்தை பழிக்கிறான் என்கிற பொய் பிரச்சாரத்தை இணையத்தில் சில குழுக்கள் கடந்த நான்கு நாட்களாகத் தொடர்ந்து செய்து வந்ததின் தொடர்ச்சியாக விடுதலை சிகப்பி மீது ஐந்து பிரிவுகளின் கீழ் அபிராமபுரம் காவல் நிலையத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. தனி நபரின் படைப்புச் சுதந்திரத்தை மதப் பிரச்னையாக மாற்றும் செயலை ஜனநாயகத்தை விரும்பும் ஒவ்வொரு வரும் எதிர்க்க வேண்டி இருக்கிறது. கடந்த 3 நாட்களாக தனிப்பட்ட முறையில் சிகப்பி இக்குழுக்களால் மிரட்டப்படுகிறார்.

top videos

    இக்குழுக்கள் கொடுக்கும் அழுத்தத்தால் கடந்த 3 நாட்களாக விடுதலை சிகப்பியின் கிராமத்தில் இருக்கும் பெற்றோர்கள் காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். ஒரு படைப்பின் மையப்பொருளை விளங்கிக்கொள்ளாமல் அல்லது விளங்கிக்கொள்ள விருப்பாமல் படைப்பு சுதந்திரத்திற்கு எதிராகத் தொடுத்த வழக்கை பதிவு செய்திருக்கும் காவல்துறை மற்றும் தமிழக அரசின் செயல் செயல் கண்டிக்கத்தக்கது.

    First published:

    Tags: Pa.rajnith