முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஒரு சின்ன முத்தம்... இதற்காகவா... அப்படி கேட்டவங்களுக்கு இது தெரியுமா ? - இயக்குநர் மோகன்.ஜி பகிர்ந்த சம்பவம்

ஒரு சின்ன முத்தம்... இதற்காகவா... அப்படி கேட்டவங்களுக்கு இது தெரியுமா ? - இயக்குநர் மோகன்.ஜி பகிர்ந்த சம்பவம்

மோகன்.ஜி

மோகன்.ஜி

பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக இயக்குநர் மோகன்.ஜி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இயக்குநர் மோகன்.ஜி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பகாசூரன் கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தில் செல்வராகவன், நட்டி நடராஜன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். சாம் சிஎஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார். இந்தப் படம் பெண்கள் பாதுகாப்பு குறித்து பிற்போக்குத்தனமான கருத்துக்களை பேசியிருப்பதாக சர்ச்சை உருவானது.

இந்த நிலையில் இயக்குநர் மோகன் .ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார். அந்த செய்தியானது, திருச்சி அருகே பத்தாம் வகுப்பு மாணவியும் டிப்ளமோ படிக்கும் மாணவனும் காதலித்துவந்துள்ளனர். இருவரும் அவ்வப்போது சந்தித்தபோதெல்லாம் இருவரும் இணைந்து செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்திருக்கின்றனர். இந்த நிலையில் மாணவியின் பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மாணவன் இருவரும் ஒன்றாக இருக்கும் படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இதனைப் பார்த்த மாணவியின் அம்மா அவரைக் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அவரை மீட்ட மாணவியின் உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனனின்றி மாணவி உயிரிழந்திருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக முசிறி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

top videos

    இந்த செய்தியைப் பகிர்ந்த இயக்குநர் மோகன் ஜி, ஒரு சின்ன முத்தம்.. இதற்காகவா பயப்படனும்னு கேள்வி கேட்ட பலருக்கு இந்த உண்மை செய்தியும் தெரியனும்.. இன்னும் இது போல பெண்கள் சமூகத்தில் இருக்காங்க..என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவர பதிவுக்கு, குடும்பத்தினர் அந்தப் பெண்ணைக் கண்டித்ததாலேயே அந்தப் பெண் தற்காலை செய்து கொண்டதாக நெட்டிஷன்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.

    First published:

    Tags: Director selvaragavan