‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மோகன்.ஜி இயக்கியுள்ள படம் ‘பகாசூரன்’. கடந்த பிப்ரவரி 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்திருந்தார். திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுது.
மேலும், படம் குறித்து நடிகர் கார்த்தி, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், யோகி பாபு, இயக்குநர் பேரரசு, எஸ்.ஜே.சூர்யா, யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் குமார், ஜீவா, நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பிரபலங்கள் பாராட்டியும் வாழ்த்தியும் கமெண்ட் செய்தனர்.
பாகாசூரன் படம் வெளியான சில நாட்களிலேயே தனது அடுத்தப் படம் குறித்த அறிவிப்பை முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்தார் இயக்குநர் மோகன் ஜி. “இவர் யார் எனத் தெரிகிறதா? காசி கங்கா ஆர்த்தியின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. எல்லா கடவுள்களையும் வணங்குபவர் ரிச்சர்ட் ரிஷி. அப்புறம், முக்கியமான செய்தி... என்னோட அடுத்த படத்தின் கதாநாயகன் ரிச்சர்ட் தான். அறிவிப்பு விரைவில்...” என்று ரிச்சர்டின் புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார்.
இந்த தடவை வேற மாதிரி ஒரு களம், வேற மாதிரி ஒரு ஆட்டம் 💥💥💥 pic.twitter.com/ZvrGN32zwb
— Mohan G Kshatriyan (@mohandreamer) March 18, 2023
இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், இயக்குநர் மோகன் ஜி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் "இந்த தடவை வேற மாதிரி ஒரு களம், வேற மாதிரி ஒரு ஆட்டம்" என்று ரிச்சர்ட் ரிஷி புகைப்படத்தை பகிர்ந்து பதிவிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Entertainment