முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக பாண்டியன் மன்னன் குறித்த படம்? யாத்திசை படம் குறித்து இயக்குநர் சொல்வது என்ன ?

பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக பாண்டியன் மன்னன் குறித்த படம்? யாத்திசை படம் குறித்து இயக்குநர் சொல்வது என்ன ?

யாத்திசை

யாத்திசை

யாத்திசை திரைப்படம் கருத்தியல் ரீதியான விவாதத்தை உருவாக்கும் என செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் தரணி ராஜேந்திரன் பேசினார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பாண்டிய மன்னர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும்  யாத்திசை திரைப்படம் கருத்தியல்  விவாதத்தை ஏற்படுத்தும் என படத்தின் இயக்குனர் தரணி ராசேந்திரன் கூறியுள்ளார்.

இடைக்கால பாண்டிய மன்னனான ரணதீரன் பின்னணியில் யாத்திசை என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர்.  இந்த திரைப்படத்தை தரணி ராசேந்திரன் என்பவர் இயக்கியிருக்கிறார்.  முழுக்க முழுக்க புது முகங்களின் பங்களிப்புடன் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

யாத்திசை திரைப்படம் 21 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதன் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள்,  இயக்குநர், தயாரிப்பாளர் உள்ளிட்ட படக் குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் தரணி ராசேந்திரன்,  இந்த திரைப்படத்திற்காக பல கட்ட ஆய்வு நடத்தி படத்தை உருவாக்கியுள்ளதாக கூறினார்.

மேலும் இந்த திரைப்படம் இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய வகையில் எடுக்கப்பட்டிருப்பதாகவும், அதில் ஒரு மணி நேரம் சண்டைக்காட்சிகள்  இருக்கின்றன எனவும் கூறினார். இது ஏழாம் நூற்றாண்டில் நடைபெறும் ஒரு புனைவு கதை என்பதால், அப்போது பேசப்பட்ட மொழிக்காக மிகுந்த ஆய்வு செய்து மொழியை உருவாக்கி படமாக்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த மொழியுடைய காட்சிகள் 15 நிமிடம் படத்தில் இடம்பெறும் எனவும்,  யாத்திசை திரைப்படம் வெளியான பிறகு கருத்தியல் ரீதியான விவாதத்தை உருவாக்கும் எனவும் தரணி ராஜேந்திரன் சுட்டிக்காட்டினார்.

இந்தப் படம் இந்திய சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டார். யாத்திசை திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அந்த ட்ரெய்லர் தற்போது யூடியூப்பில் 80 லட்சம் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

top videos

    முழுக்க முழுக்க புதுமுகங்களின் பங்களிப்புடன் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பால் யாத்திசை திரைப்படத்தின் குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். வரும் 28ஆம் தேதி சோழ மன்னர்களை மையமாகக் கொண்ட பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ள நிலையில், 21 ஆம் தேதி பாண்டிய மன்னர்களின் புனைவு கதை யாத்திசை வெளியாவது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Ponniyin selvan