சுந்தரபாண்டியன் பட இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் தற்போது கலையரசன், வாணி போஜன் நடிப்பில் செங்களம் என்ற வெப் சீரிஸை இயக்கியிருக்கிறார். இந்த வெப் சீரிஸ் ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது.
இதன் அறிமுக விழாவில் இயக்குநர் அமீர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பின்பு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமீர், ''கலைக்கு அரசியல் கிடையாது. நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது பெருமை. என்னை பொறுத்தவரை ஆஸ்கர் விருது பெரிய விருது கிடையாது. எல்லோராலும் பார்க்கப்படுவதினால் அதற்கு முக்கியத்துவம் இருந்ததே தவிர அது அந்த நாட்டு தேசிய விருது என்று எடுத்துக்கொள்ளலாம்.
இந்தியாவின் சிறந்த நடிகரான சிவாஜி கணேசன் வெளிநாடு சென்ற போது அவருடன் ஹாலிவுட் நடிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். அதற்கு காரணம் அவர் ஹாலிவுட் அளவு டெக்னாலஜி இல்லாமல் வெறும் மேக்கப்புடன் பல வேடங்களில் நடித்துதான். ஆனால் அவருக்கு தேசிய விருது கொடுக்கப்படவில்லை.
சிவாஜி படம் வெளியானபோது அந்த ஆண்டுக்கான மாநில அரசின் சிறந்த நடிகர் விருது நடிகர் ரஜினிகாந்த்துக்கு வழங்கப்பட்டது. மனசாட்சி தொட்டு சொல்லுங்க. ரஜினி சிறந்த நடிகரா? இல்லை. அவர் சிறந்த எண்டர்டெயினர். அந்தப் படத்தை பொறுத்தவரை நான் சொல்கிறேன். ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும் உள்ளிட்ட படங்களில் சிறப்பாக நடித்திருப்பார். அதற்கு ஏன் கொடுக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ameer