முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மீண்டும் கொக்கி குமாராக களமிறங்கும் தனுஷ்... இயக்குநர் யார் தெரியுமா?

மீண்டும் கொக்கி குமாராக களமிறங்கும் தனுஷ்... இயக்குநர் யார் தெரியுமா?

தனுஷ்

தனுஷ்

தனுஷின் 50வது படம் புதுப்பேட்டை பட கொக்கி குமார் கதாபாத்திரத்தின் தொடர்ச்சியாக உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க இவருடன் நிவேதிதா சதிஷ், குமாரவேல், டேனியல் பாலாஜி, நாசர், மேற்கு தொடர்ச்சி மலை ஆண்டனி, பால சரவணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

மேலும் பிரபல நடிகர் சந்தீப் கிஷன் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 1940 காலகட்டத்தில் நடப்பது போல இந்தப் படம் உருவாகிவருகிறது.

இதையும் படிக்க | சிம்பு பட நடிகையை தரதரவென இழுத்து சென்ற கணவர்... இதுதான் காரணமா?

இதனையடுத்து கர்ணன் படத்துக்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கிறார். இந்தப் படத்தை நீண்ட இடைவேளைக்கு பிறகு தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த நிலையில் தனுஷின் 50வது படத்தை தனுஷே இயக்கவிருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இந்தப் படமானது புதுப்பேட்டை படத்தின் கொக்கி குமார் கதாப்பாத்திரத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தின் திரைக்கதையில் இயக்குநர் செல்வராகவனின் பங்களிப்பும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

top videos
    First published:

    Tags: Actor Dhanush, Director selvaragavan