முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மீண்டும் இணையும் கர்ணன் கூட்டணி! - மாரி செல்வராஜ் - தனுஷ் பட அறிவிப்பு

மீண்டும் இணையும் கர்ணன் கூட்டணி! - மாரி செல்வராஜ் - தனுஷ் பட அறிவிப்பு

தனுஷ் - மாரி செல்வராஜ்

தனுஷ் - மாரி செல்வராஜ்

கர்ணன் படத்துக்கு பிறகு தனுஷ் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் இணையும் படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துவருகிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். பீரியட் படமாக பிரம்மாண்டமாக உருவாகிவருகிறது.

இந்த நிலையில் இதனையடுத்து மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. கர்ணன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 2 ஆண்டுகள் ஆன நிலையில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தனுஷ் தனது வுண்டர்பார் ஃபிலிம்ஸ் சார்பாக 3, வேலையில்லா பட்டதாரி, மாரி, நானும் ரௌடி தான், எதிர் நீச்சல், காக்கி சட்டை போன்ற பல படங்களை தயாரித்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக எந்த படங்களையும் தயாரிக்காமல் இருந்துவந்த அவர் தற்போது மீண்டும் பட தயாரிப்பில் இறங்கியிருக்கிறார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் படத்தை இயக்கியுள்ள நிலையில், தற்போது குழந்தைகளை மையமாக வைத்து வாழை என்ற படத்தை இயக்கிவருகிறார்.

First published:

Tags: Actor Dhanush, Mari selvaraj